தொழில் கஷ்டங்கள்...
ஆலிம் ஆகு
ட்ரஸ்டி போட்டால்
கஷ்டப் படுவாய்.
மோதின் ஆகு
மேதினம் உட்பட
நீ தினம் வேலை.
டொக்டராயிரு
டொக் டொக்
டொக் டோரில்
சாமத்திலும்.
இஞ்சினியராய் ஆகு
இஞ்சி நீராய் உறைக்கும்
'INCH' பிழைத்தாலும்.
கணக்காளராகு
இலக்கம் பார்த்தே
சுளுக்கும் கழுத்து.
வக்கீலாயிரு
சிக்கல் கேட்டே
விக்கல் வரும்.
ஆசிரியராகு
கண்டபடி கத்தித்
தொண்டை காயும்.
அதிபராயிரு
கெட்ட பெயர்
கட்டாயமாகும்.
லெப்பில் இரு
அறிக்கை எழுதியே
அரிக்கும் கை.
தாதியாகு
வீடு பாதி
வார்டு பாதி.
வர்த்தகம் செய்
செக்கோடு வாழ்க்கை
சேர்ந்தே கிழியும்.
லிகிதராய் ஆகு
கோப்பு சில நேரம்
ஆப்பாகும்.
அதிகாரியாய் ஆகு
பென்ஷன் வரைக்கும்
டென்ஷன் இலவசம்.
வெளி நாட்டு வேலை
வீட்டு நினைப்பு
சாட்டையாய் வலிக்கும்.
சாரதியாய் இரு
பொலிசுக்குக் கொடுத்தே
பொக்கட் கிழியும்.
கண்டக்டராய் இரு
கல்லறை வரைக்கும்
சில்லறையால் பிரச்சினை.
மீனவனாய் ஆகு
சிக்கும் மீன்களால்
சிக்கல் தீராது.
சும்மாயிரு
கேள்விகளாலே
தோல்வி உணர்வாய்.
எல்லாத் தொழிலிலும்
இன்னல் உண்டு.
ஆனாலும் பெருமகிழ்வும்
அதில்தான் உண்டு.
M.B.M.JIFNAS (ALMISBAHI)
ஆலிம் ஆகு
ட்ரஸ்டி போட்டால்
கஷ்டப் படுவாய்.
மோதின் ஆகு
மேதினம் உட்பட
நீ தினம் வேலை.
டொக்டராயிரு
டொக் டொக்
டொக் டோரில்
சாமத்திலும்.
இஞ்சினியராய் ஆகு
இஞ்சி நீராய் உறைக்கும்
'INCH' பிழைத்தாலும்.
கணக்காளராகு
இலக்கம் பார்த்தே
சுளுக்கும் கழுத்து.
வக்கீலாயிரு
சிக்கல் கேட்டே
விக்கல் வரும்.
ஆசிரியராகு
கண்டபடி கத்தித்
தொண்டை காயும்.
அதிபராயிரு
கெட்ட பெயர்
கட்டாயமாகும்.
லெப்பில் இரு
அறிக்கை எழுதியே
அரிக்கும் கை.
தாதியாகு
வீடு பாதி
வார்டு பாதி.
வர்த்தகம் செய்
செக்கோடு வாழ்க்கை
சேர்ந்தே கிழியும்.
லிகிதராய் ஆகு
கோப்பு சில நேரம்
ஆப்பாகும்.
அதிகாரியாய் ஆகு
பென்ஷன் வரைக்கும்
டென்ஷன் இலவசம்.
வெளி நாட்டு வேலை
வீட்டு நினைப்பு
சாட்டையாய் வலிக்கும்.
சாரதியாய் இரு
பொலிசுக்குக் கொடுத்தே
பொக்கட் கிழியும்.
கண்டக்டராய் இரு
கல்லறை வரைக்கும்
சில்லறையால் பிரச்சினை.
மீனவனாய் ஆகு
சிக்கும் மீன்களால்
சிக்கல் தீராது.
சும்மாயிரு
கேள்விகளாலே
தோல்வி உணர்வாய்.
எல்லாத் தொழிலிலும்
இன்னல் உண்டு.
ஆனாலும் பெருமகிழ்வும்
அதில்தான் உண்டு.
M.B.M.JIFNAS (ALMISBAHI)
No comments:
Post a Comment