****************************
அதிகாலைத் தொழுகைக்குச் செல்லும் ஒருவரைப் பார்த்து இறைவன் வியக்கும்காட்சியை நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வாறு விவரிக்கின்றார்கள்:
“படுக்கை, போர்வை,மனைவி, மக்களின் அரவணைப்பு அத்தனையையும் உதறிவிட்டு அதிகாலையில் எழும்மனிதனைப் பார்த்து இறைவன் வியப்படைகின்றனான்.
வானவர்களிடம் கேட்கின்றான்:“வானவர்களே! எனது இந்த அடியானைப் பாருங்கள்..!
படுக்கை, போர்வை, மனைவி,மக்கள் அத்தனையையும் உதறி-விட்டு அதிகாலையில் எழுந்துவிட்டான். எதற்காக..?என்ன வேண்டும் இந்த அடியானுக்கு..?
எனது அருள்மீது ஆசை வைத்தா…? எனதுதண்டனையைப் பயந்தா…?”
பின்னர் வானவர்களிடம் அல்லாஹ்வே கூறுகின்றான்:“உங்களை சாட்சி வைத்துக் கூறுகின்றேன்: அவன் ஆசைப்பட்டதை நான் அவனுக்குநிச்சயம் கொடுப்பேன். அவன் எதைப் பயப்படுகின்றானோ அதிலிருந்து நிச்சயம்அவனுக்கு நான் பாதுகாப்புக் கொடுப்பேன்.”
நூல்;-(அஹ்மத்)
இன்று சுப்ஹ் தொழுதீர்களா?
நாளை சுப்ஹ் தொழுவீர்களா?
அல்லாஹ்வின் கவனத்தை ஈர்க்கும் சுப்ஹ் தொழுகையை தொழ நீங்கள் தயாரா?
No comments:
Post a Comment