Prof

Sunday, February 14, 2016

காஞ்சு போன சிந்தனை தீஞ்சு போன இதயம்

🔳 ♦️♦️ காஞ்சு போன சிந்தனை தீஞ்சு போன இதயம் 🔳♦️♦️

      🔷TM முபாரிஸ் ரஷாதி🔷

நான் ஒரு இஸ்லாமிய அழைப்பாளன்
என்னுடைய தோற்றம் அடர்ந்த தாடி
அழகிய வெந்நிற ஜுப்பா கையிலிருக்கும்
மிஸ்வாக் பையிலிருக்கும் தஸ்பீஹ்
ஏழு முழ தலைப்பாகை என்று பிறர் என்னைப் பார்த்தவுடன்
நான் ஒரு சுவனவாதி என்று சொல்லுமளவிற்கு ஓர் அழகிய மனித உருவம் கொண்ட ஒரு மலக்கு

நான் பேச ஆரம்பித்தால் சுப்ஹானல்லாஹ் அல் ஹம்துலில்லாஹ்
அல்லாஹு அக்பர் என்ற தஸ்பீஹ் அடிக்கடி வந்து கொண்டே இருக்கும்

நான் வீதியில் சென்றால் பார்வையை கீழ் தாழ்த்தி இஸ்திஃபார் வாயில் வந்த படியே உம்மதின் கவலை சுமந்து கொண்டே நடக்கிறேன்

நாள்தோறும் தொழுகிறேன் குர்ஆன் ஓதுகிறேன் திக்ர் செய்கிறேன் துஆ கேற்கிறேன் ஏன் என்னை யாரும் பார்ப்பதாயிருந்தால் கூட பள்ளி வாசலுக்கே வர வேண்டும் என்ற ஒரு உன்னதமான நிலையில் இருக்கிறேன்

இது அந்த நாணயத்தின் ஒரு பக்கம்
மறு பக்கம் இதோ....

எனது மனைவி : ஏங்க ஒருநாளாவது என்னோட பிள்ளைகளோட சந்தோஷமா சிரிச்சு பேசமாட்டீங்களா?

பகலைக்கு சமைக்க கறியில்ல பிள்ளைட பால் பெட்டி முடிஞ்சுது பிள்ள பசியில அழுகுறான் போய் வாங்கிட்டு வாங்களே... என்னங்க அல்லாஹ் லேசாக்குவாண்டு சர்வ சாதாரணமா சொல்லிட்டு போறீங்களே .....

எனது பிள்ளை : வாப்பா எண்ட இருந்த ஸ்கூல் உடுப்பு ஒண்ணே ஒண்ணும் கிழிஞ்சு போச்சு இன்னொரு உடுப்பு வாங்கி தாங்க வாப்பா எல்லாரும் என்ன
கிழிஞ்ச களுசான் எண்டு பட்டப்பேர் சொல்லி கூப்டாராங்க வாப்பா

எனது தாய் : ஹலோ
மகன் நீங்க ரெண்டு வருஷத்துக்கு முன்னுக்கு வாப்பாட மையத்துக்கு வந்துட்டு போன நேரம்
ஒங்கட மணிக்கூட அலுமாரிக்கு மேல வச்சுட்டு போன அதயாவது வந்து எடுத்துட்டு போங்க ராசா

( பேச்சக் கேட்காமலேயே ) சொறி நீங்க யாரு ..... ரோங் நம்பர்
பொம்பள கொரல் ச்சீ பித்னா பித்னா

எனது உள்ளம் : நான் மட்டும் தான் இறையச்சம் உள்ளவன் என்ற இறுமாப்பு

சமூகத்திலுள்ளவர்கள் என்னை மதிக்க வேண்டும் நான் மட்டுமே நல்ல பேணுதலுள்ளவன் என்ற செருக்கு

என்னை விட உயர்ந்து செல்ல யாரையும் விட மாட்டேன் அப்படி யாராவது உயர்ந்து சென்றால் அவரை வாயில் வந்த படி இல்லாத பொல்லாதவற்றைச் சொல்லி சாடுவேன் வசை பாடுவேன்

எனது கௌரவத்தை தக்க வைத்துக் கொள்ள யாரையும் எப்படியும் விமர்சிப்பேன்

யார் நல்லது செய்தாலும் அதில் குறை காண்பதிலே எனது உள்ளம் இன்பம் அடைகிறது

உதட்டில் தேன் வடிந்தாலும்
நெஞ்சாங்கூட்டில் நஞ்சு விளைகிறது

காஞ்சு போன சிந்தனை தீஞ்சு போன  இதயம் என்னுள் என்பது என்னைத் தவிர
வேறு யாருக்கும் தெரியாது

ஆதலால் நான் சமூகத்தில்
ஓர் ஒப்புவமையற்ற ஒரு முத்தகி

இறைவனிடத்தில் ?

✒️நட்புடன் TM முபாரிஸ் ரஷாதி
ஹதீஸ் துறை விரிவுரையாளர் - பாதிஹ் கல்வி நிறுவனம் - திஹாரி
◽️♦️◽️♦️◽️♦️◽️♦️◽️♦️◽️♦️◽️

No comments:

Post a Comment