பல மயில் தாள்கள் செலவுசெய்து
வாங்கினேன் ஒரு ஸ்மார்ட் போன்
கறுப்பு நிறம் ஸ்லிம் மொடல்
ஆரம்பத்தில் கொஞ்சம்
அடம்பிடித்து- பின்னர்
ஆறாவது விரலாய் ஆகிப்போனது !
காற்சட்டைப் பக்கற்றில்
பர்ஸ் வைக்க மறந்திடினும்
போனை மட்டும் மறந்திடேன்
இருக்கையில் நடக்கையில் படுக்கையில் என
எல்லா இடங்களிலும் கூடவே வந்தது...!
Facebook நெருக்கமானது
Whats App வந்து அறிமுகமானது
Instagram Telegram கூட ஹலோ சொன்னது
Selfie எடுப்பதுவே வாடிக்கையானது
நாளாக நாளாக நட்பு வட்டம் பெருகியது
அறிமுகமில்லா நபர்களிடமிருந்தும்
அறிமுகம் கிடைத்தது
விட்டுப்போன பள்ளி நண்பன்
பழைய பகைவனெல்லாம்
குரூப் chat இல் நெருக்கமானான்...!
Alarm அடித்து எழுப்பாட்டி
காலைத் தேநீருடன் ஊர் நடப்பு பேசி
நான் உறங்க உறங்கி
கண்விழிக்கையில் எழுந்து இப்படி
அண்டம் பெருவெளி
ஆழச் சமுத்திரம் தாண்டியும்
நானும் என் செல்போனும் பயணித்திருந்தோம்!
ஓர் திருப்பத்தில் எதோ நெருட
சற்றே திரும்பிப் பார்த்தேன்...!
என் மனைவியும் குழந்தைகளும்
எனை விட்டும் வெகுதூரம் நின்றிருந்தனர் !!
பணம் கொடுத்து போனை
விலைக்கு வாங்கிவிட்டதாய்
இறுமாந்திருந்தேன் !!
இப்போதுதான் புரிகிறது
நல்ல விலை கொடுத்து
அது என்னை வாங்கிக் கொண்டது...!
வாங்கினேன் ஒரு ஸ்மார்ட் போன்
கறுப்பு நிறம் ஸ்லிம் மொடல்
ஆரம்பத்தில் கொஞ்சம்
அடம்பிடித்து- பின்னர்
ஆறாவது விரலாய் ஆகிப்போனது !
காற்சட்டைப் பக்கற்றில்
பர்ஸ் வைக்க மறந்திடினும்
போனை மட்டும் மறந்திடேன்
இருக்கையில் நடக்கையில் படுக்கையில் என
எல்லா இடங்களிலும் கூடவே வந்தது...!
Facebook நெருக்கமானது
Whats App வந்து அறிமுகமானது
Instagram Telegram கூட ஹலோ சொன்னது
Selfie எடுப்பதுவே வாடிக்கையானது
நாளாக நாளாக நட்பு வட்டம் பெருகியது
அறிமுகமில்லா நபர்களிடமிருந்தும்
அறிமுகம் கிடைத்தது
விட்டுப்போன பள்ளி நண்பன்
பழைய பகைவனெல்லாம்
குரூப் chat இல் நெருக்கமானான்...!
Alarm அடித்து எழுப்பாட்டி
காலைத் தேநீருடன் ஊர் நடப்பு பேசி
நான் உறங்க உறங்கி
கண்விழிக்கையில் எழுந்து இப்படி
அண்டம் பெருவெளி
ஆழச் சமுத்திரம் தாண்டியும்
நானும் என் செல்போனும் பயணித்திருந்தோம்!
ஓர் திருப்பத்தில் எதோ நெருட
சற்றே திரும்பிப் பார்த்தேன்...!
என் மனைவியும் குழந்தைகளும்
எனை விட்டும் வெகுதூரம் நின்றிருந்தனர் !!
பணம் கொடுத்து போனை
விலைக்கு வாங்கிவிட்டதாய்
இறுமாந்திருந்தேன் !!
இப்போதுதான் புரிகிறது
நல்ல விலை கொடுத்து
அது என்னை வாங்கிக் கொண்டது...!
No comments:
Post a Comment