Prof

Sunday, February 14, 2016

சின்ன பார்சல் ஒண்டிருக்கு.... ( பாகம் 2)

-சின்ன பார்சல் ஒண்டிருக்கு.... ( பாகம் 2)-

அது..

5 லீட்டர் கொள்ளக்கூடிய பெரிய பிளாஸ்டிக் கொள்கலன்.. உள்ளே பழுப்பு நிறமாய் ஏதோ இருந்தது. புரியாமல் பார்த்து நின்ற என்னை நோக்கி,

“அது விளாம்பழம், மருமகனுக்கு விருப்பம்..” என்று சிரித்தார் மாமியார்.

மண்டைக்குள் தீப்பற்ற,

“இஞ்ச உம்மா! இதெல்லாம் எப்பிடி கொண்டு போற? எனக்கு இதெல்லாம் கொண்டு போக எலா!” என்றேன் கொஞ்சம் குரலை உயர்த்தி.

“ப்பாஹ்.. எண்ட மாப்பிள 20 வரிசமா சவ்தில இருந்த , நாங்க எவ்ளவு சாமான் அனுப்பி இரிக்கம் தெரியுமா?” என்றார் விடாமல்.

இதென்ன கஷ்டம்டா!

“ நீங்க அனுப்புங்கோ! ஆனா, எனக்கி இவ்வளவும் கொண்டு போக ஏலா, முக்கியமான சாமான் கொஞ்சத்த தாங்கோ கொண்டு போறன்.” என்றேன் இன்னும் கொஞ்சம் சூடாக.

மனிசி விடுவதாய் இல்லை.

“அவர் இரிக்ககுள்ள எவ்வளவு சாமான்...” மாமியார் முடிக்கு முன்னே,

“அதுக்கு என்ன செய்ய சொல்றயள்? எனக்கி ஏலா.. நீங்க இதெல்லாம் கொண்டு போங்கோ. நான் கொண்டு போக மாட்டன்” என்றேன் சூடாக,

மூத்தம்மாவின் கையில் திடீரென மொபைல்! எங்கிருந்து முளைத்ததோ தெரியாது.

மகளுக்கான அழைப்பென்று விளங்கியது.
நான் வேடிக்கை பார்க்க தொடங்கினேன்.. திடீரென ,மொபைல் என்னிடம் நீட்டப்பட, தீர்மானமாக இதை திருப்பிக் கொடுப்பது என்ற எண்ணத்தில் காதில் வைத்தேன்.

“ கொஞ்சம் சாமான் தானே, எடுத்துக்கு போங்களன் நாநா! “ என்றது மறுமுனை.

“ நான் கொண்டு போறது சின்ன லக்கேஜ்! நீங்க ரீசேர்ட் எங்கயும் தான் நான் ஓம் எண்ட, இதெல்லாம் எடுத்துக்கு போக ஏலா சிஸ்டர்..” என்று கூறிக்கொண்டே பதிலை எதிர்பார்க்காமல் போனை மூத்தம்மாவிடம் கொடுத்து விட்டேன்.

மூத்தம்மா என்னை பார்வையால் சுட்டெரித்துக் கொண்டிருந்தார்.

மகள் அனைத்தையும் திருப்பி எடுத்துவர உத்தரவிட்டிருக்க வேண்டும். போனை வைத்துவிட்டு சாமான்களை அள்ளி கொண்டுவந்த பைக்குள் அடைக்க தொடங்கினார். வாய் எதையோ முணுமுணுத்துக் கொண்டே இருந்தது.

“என்ன?” என்றேன்.

“எங்கிட அவர் இரிக்ககுள்ள நாங்க எவ்வளவு சாமான் அனுப்புற எண்டு தெரியிமா?, ஆக்கள் கொண்டு போறான்”

இருக்கும் எரிச்சலில் இன்னும் பற்றிக் கொண்டு வர,

“ அந்த 5 லீட்டருக்கு அடிச்ச விளாம்பழம் கொண்டு போன வெங்காயப்பேயன் இப்ப எங்க இரிக்கான், அவன கொஞ்சம் பாக்கணும் அட்ரச தாங்களன்..” என்றேன்.

மாமியார் கொஞ்சம் மிரள, அவசர அவசரமாக இடம் காலியானது..

எல்லாத்தையும் பொறுத்துக்கலாம். ஆனா அந்த 5லீட்டர் விளாம்பழ டப்பாதான் வாழ்நாளில் மறக்காது.

-சுபம்-

No comments:

Post a Comment