Prof

Friday, February 5, 2016

இலங்கைக்குள் மாடறுப்புக்கு தடை விதிக்கப்பட்டால் எதிர்காலத்தில் எப்படியான செய்திகள் வரும்......



ம்ம்ப்பா.....ம்ம்பா .......

1. மத்தள விமான நிலையமூடாக , பச்சை  மாட்டிறைச்சி கடத்த முற்பட்ட இருவர் கைதுசெய்யப்பட்டு , தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

2. இலங்கையில் இரண்டரை கோடி மக்களும் , மூன்று கோடி மாடுகளும் வசிப்பதாக புள்ளிவிபரவியல் திணைக்களம் தமது ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

3. மாடுகள் மீதான அரசியல் அக்கறையின் விளைவாக, மாடுகளுக்கும் வாக்குரிமை கோரி பாராளமன்றத்தில் விவாதம், முஸ்லிம் அங்கத்தவர்கள் ஆதரவு.

4. கொழும்பில் , பச்சை மாட்டிறைச்சி உண்ட ஒருவரை மக்கள் கூட்டம் கூடமாக சென்று பார்வை இட்டு தமது ஆச்சரியத்தை தெரிவிக்கின்றனர்.

5. வீதிகள் தோறும் மாடுகள் நிறைந்து காணப்படுவதால் , பயணிகளை மிக அவதானமாக செல்ல அரசு ஆணை பிறப்பித்துள்ளது , மீறுவோர்,அல்லது மாடுகளுக்கு விபத்தை ஏற்படுத்துவோர் தீவிர தண்டனைக்கு உட்படுத்தப்படுவர்.

6. இலங்கையில் , ஆங்காங்கே மாடுகள் இளைப்பாறும் நிலையங்களை சகல வசதிகளுடன் அமைக்க ஜனாதிபதி உத்தரவு.

7. மாடுகளை கௌரவிக்க, இனி நாட்டில் பெய்ன்ட் உற்பத்தி முற்றாக தடை செய்யப்பட்டு, மாட்டுச்சாணி மூலம் வீடுகளுக்கு பெய்ன்ட் அடித்து அழகுபடுத்தும் சட்டமூலம் விரைவில் மனமகிழ் மன்றமான பாராளமன்றில் தாக்கல் செய்யப்படும்.

8. மாடுகளை ஒருமையில் பேசி அழைக்கும் நபர்களை நாகரீகம் தெரியாத குடிமகன் என்று அடையாளப்படுத்தட்டு சமூகத்தில் இருந்து ஓரம் கட்டப்படும்.

9. இறந்த மாடுகளை உரிய முறைப்படி புதைக்கவும் அல்லது எரிக்கவும் அரசு மானியம் வழங்கும் .

10. மாடுகள் தினம் என்று ஒன்று பிரகடனப்படுத்தப்பட்டு கொண்டாடப்படும்.

11. மாடுகள் இறந்தால் ,கட்டாயம் மூன்று நாளைக்கு துக்க தினம் அனுஷ்டிக்கப்படல் வேண்டும் என்று அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

12. அரச இலச்சினை இன்று முதல் மாட்டுச்சின்னமாக மாற்றப்படும்.

🐄🐄🐄🐄🐄🐄🐄🐄🐄

No comments:

Post a Comment