Prof

Wednesday, February 17, 2016

இலங்கை அதிபர் சேவை 3

இலங்கை அதிபர் சேவை 3 ஆம் வகுப்புக்கு ஆட்சேர்ப்பு
ஆசிரியர் சேவையில் பெற்றுக் கொண்டிருக்கும் சம்பளம் குறையுமா?
மீண்டும் மீண்டும் அதே கேள்விகள்

1994.10.06 தொடக்கம் இந்த பிரச்சினை இருந்து வந்தது.இது தொடர்பாக எனது பல கட்டுரைகள் தினகரன்,தினக்குரல்,வீரகேசரி,யாழ் தினக்குரல் உட்பட பல பத்திரிகைகளில் வெளிவந்துள்ளமையை அதிபர்களும்,ஆசிரியர்களும் அறிவார்கள் .பத்திரிகை ஆக்கங்களோடு நின்று விடாது தொழில் சங்க ரீதியாகவும் இயங்கி இதை வென்றேடுத்துள்ளோம்

தற்போது வெளியிடப்பட்டுள்ள இலங்கை அதிபர் சேவை 3 ஆம் வகுப்பு போட்டிப் பரீட்சை முடிவுகளின்படி சித்தி அடைந்துள்ள 4,079 பேர்களில் 1,104 பேர்கள் தமிழ் முஸ்லிம் அதிபர்கள்.ஆவர் இது 27%மாகும் ,சந்தோஷமான,வரவேற்க்கத் தக்க விடயமாகும்..இ தில் 50-100 பேர்கள் வரை முதலாவது  நேர்முகப் பரீட்சையில் தட்டுப் படுவார்கள் காரணம் விண்ணப்பிக்கும் போது அடிப்படை தகைமை இல்லாமையே யாகும்

ஆசிரியர் சேவையில் 1 ஆம் வகுப்பு,,2-1 தர ஆசிரியர்களாக இருப்பவர்களின் சம்பளம் குறையுமா என்ற கேள்விக்குப் பலமுறை பதில் சொல்லி விட்டேன்.சம்பந்தப்பட்ட எல்லாரும் இதைப் படிப்பது இல்லை என்பது எனக்குத் தெரியும்.ஆனால் தமக்குத் தேவையென்றால் தேடி அறியத் தானே வேண்டும்

இலங்கை அதிபர் சேவையின் சம்பளத் திட்டம் 3ஆம் வகுப்பு 17.060-7X 330-5X 330-21,020/=ஆகும்.இந்த சம்பளம் 2016.01.01  முதல் 35,240-7X 680-5X 680-43,400/= என்ற வகையில் அதிகரிக்கப்படலாம் (சுற்றறிக்கை இன்னும் வெளியாகவில்லை)

இதே போல இலங்கை ஆசிரியர் சேவையின் 2-1 சம்பளமும் இப்போது உள்ளது 18,950/=-7X 400-5X 400-23,750/= ஆகும் .இதுவும் 39,175-7X 825-5X 825-49,075/= ஆக மாறவுள்ளது .இதன்படி பழைய சம்பளத்தின் படியோ வரவுள்ள புதிய சம்பளத்தின் படியோ எடுத்துக் கொண்டு இருக்கும் சம்பளமோ வருடாந்த சம்பள ஏற்றமோ குறைய மாட்டாது

ஆனால் அதிபர் சேவைக்கு வந்த பின்பு ஆசிரியர் சேவையின் பதவி உயர்வையையோ அதனால் கிடைக்கவுள்ள சம்பளத்தையையோ எதிபார்க்கக் கூடாது .



Anbu javaharsha

No comments:

Post a Comment