அல் குர்ஆனிய மனிதர் இமாம் ஹசனுல் பன்னா ரஹ் அவர்களின் வீரமரணம்
(67 ஆண்டு நிறைவில்)
1949ம் ஆண்டு பெப்பரவரி மாதம் 12ம் திகதி சனிக்கிழமை இரவு 7.50 மணிக்கு கெய்ரோ வீதியொன்றில் வைத்து ஏழு ரவைகள் அவரது மேனியை துளைக்கும் வகையில் சுடப்பட்டார்
குண்டுகளால் துளைக்கப்பட்ட அவரது தூய உடல்
90 வயதையும் தாண்டிய அவரது தந்தையிடம்
பல்வேறு நிபந்தனைகளுடன் ஒப்படைக்கப்பட்டது
சுபுஹுக்கு சற்று முன்பாக ஜனாசாவை ஆயுதப்பாதுகாப்புடன் கொண்டு வந்தனர் மிக நெருங்கிய உறவினர்கள் கூட
வர அனுமதிக்கப்படவில்லை
உலக வரலாற்றில் பெண்களால் சுமந்து செல்லப்பட்ட ஒரே ஒரு ஜனாஸா அது இமாம் பன்னாவுடையதாகவே இருக்க வேண்டும்
வீதி எங்கும் அரசாங்கத்தின்
பொலிஸ்மயம் எவருக்கும் ஜனாஸாவில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படவில்லை
ஜன்னல்கள் வழியாகவும்
கதவுத்துவாரங்களூடாகவும்
மக்கள் அந்த சோக காட்சியைப் பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர்
மஸ்ஜிதுக்கு வந்தோர் பொலிஸாரின் முன்னேற்பாட்டின் பேரில் மஸ்ஜித் வெறுமையாக்கப்பட்டிருப்பது கண்டு ஆச்சரியமடைந்தனர்
பன்னாவை அடக்கம் செய்யச் சென்ற மஸ்ஜித் வெறிச்சோடிக் கிடந்தது
அதன் பின் நாமே தொழுதுவிட்டு ஜனாஸாவை அடக்கம் செய்து விட்டு வீடு திரும்பினோம்
என அந்த சோக நிகழ்வு பற்றி இமாம் பன்னாவின் 90 வயதையும் தாண்டிய வயது முதிர்ந்த தந்தை அப்துர் ரஹ்மான் அல் பன்னா ரஹ் குறிப்பிடுகிறார்கள்
எகிப்தின் ஏகாதிபத்திய அரசின் அராஜாகங்களினதும் அடாவடித்தனங்களினதும் வெளிப்பாடே
இமாம் பன்னா அவர்களின் படு கொலை
இமாம் பன்னாவின் இந்த மரணம் கூட அவர்களின் நீண்ட நாள் ஷஹாத்த் வீரமரணம் எனும் பிரார்த்தனையின் பிரதிபலிப்பாகும்
அது மட்டுமின்றி இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த அறிஞர் ஷஹீத் செய்யித் குதுப் அவர்களை இந்த கொள்கையோடு இணைத்தது இமாம் அவர்களின் வீர மரணமே
இறுதியில் பன்னா எனும் அல்குர்ஆனிய மரத்தில் பூத்த மலர்கள் தான் இந்த உலக வரலாற்றையே மாற்றும் வழியில் போராடிக் கொண்டிருக்கின்றன
இந்த உலகமே கண்டு வியக்கும் அற்புதமான படைப்பாளிகளான
ஷேய்க் முகம்மத் அல் கஸ்ஸாலி ரஹ்
அப்துல் காதர் அல் அவ்தா
அல்லாமா யூசுப் அல் கர்ளாவி
முகம்மது குதுப் முஸ்தபா அஸ்ஸிபாஈ இவர்களெல்லாம்
அந்த பன்னா எனும் ஈமானிய
மரத்தில் பூத்த பூக்களே
பன்னா இன்றும் வாழ்கிறார்
மண்ணுக்கு மேலே அல்ல
பல கோடி மனித மனங்களில்
என்றும் இமாம் பன்னாவை எனது பிரார்த்தனைகளில் இணைத்தவனாக

No comments:
Post a Comment