-----
“அவருக்கு டீசேர்ட் ஒண்டு இரிக்கி எடுத்துக்கு போவயளா?” மனைவியிடம் கேட்டு அனுப்பி இருந்தார் அம்மணி.!
தனியே திரும்பி வருவதால், பெரிய லக்கேஜ்கள் எதுவும் இல்லை. சிறிய கைப்பையும் ஒரு தோள்ப் பையும் தான் என்பதால் அனேகமான பொருட்களை தவிர்த்திருந்தும் அந்த “அவர்” எனக்கு பக்கத்தில்தான் இருக்கின்றார் என்பதாலும் ஒரு ரீசேர்ட் தானே என்பதாலும் சரி என்றிருந்தேன்.
மறுநாள் , அவரின் மாமியார் ஆட்டோவில் வந்து இறங்கினார். கூட வந்த சிறுவன் ஒரு மூடைக்கு அண்மித்த ஒரு பையினை தூக்க வலுவற்று இழுத்துக் கொண்டு இறங்கினான்.
“இத மகள் குடுக்க சொன்னா, மருமகன், மகன், மருமகண்ட காக்கா எல்லாரும் இரிக்கிறானே, அதான் கொஞ்ச சாமான்!” என்றவாறே.
“இது காஞ்ச எறச்சி பார்சல், கொச்சிக்கா தூள், ரம்ப எல கொஞ்சம், மிக்சர் பக்கட் மூணுவருக்கும். கருவாடு கொஞ்சம்.... “ பட்டியலை வாசித்தவாறே, ‘ ‘நீங்க ஒண்டயும் ஒடைக்க தேவல்ல எல்லாம் வெளியால வெளங்கும்’. என்று முடித்தார் மாமியார்.
எரிச்சலை அடக்கியவாறு, “ஒங்குட மகள், ஒரு சேர்ட் எண்டுதானே சொன்ன, அத காணல்லியே” என்றேன்.
“ஆ! அது அந்த மிக்சர் பக்கட்டுக்க வச்சிருக்கு..” சொல்லிவிட்டு எடுத்துக்கொண்டு வந்த பெரிய பையை மடிக்கும் வேலையில் மும்மூரமாக இருந்தார் அவர்.
“இஞ்ச உம்மா,! இவ்வளவும் கொண்டு போற கஷ்டம்...” என நான் முடிக்கு முன்.
“ஆ! மறந்திட்டு, இதையும் கொண்டு போகணும், இதான் முக்கியமாம் எண்டு சொல்ல சொன்னா..” என்று சொல்லிக் கொண்டே, இன்னொரு பையில் இருந்த பெரிய டப்பா ஒன்றினை வெளியே எடுத்தார் மாமியார்.
அது...
( தொடரும் )

Vantha coments 1
ReplyDeleteபார்சல தூக்கி சொத்தையில வீசியிருப்பயல் எண்டு நினைக்கன். அல்லது நீங்க ஓரளவு பொறுமைசாலி என்டா, பாஸ்போர்ட் ஐயும் டிக்கட்டையும் மாமிக்கிட்ட கொடுத்து, 'நீங்களே போய் கொடுங்க' எண்டு சொல்லி இருப்பீங்க. வாசிக்கும் போதே எனக்கு ஆத்திரம் கமின்க்.
“ஒங்குட மகள், ஒரு சேர்ட் எண்டுதானே சொன்ன, அத காணல்லியே” என்றேன்.
ReplyDelete“ஆ! அது அந்த மிக்சர் பக்கட்டுக்க வச்சிருக்கு..”
சத்தமா சிரிச்சிட்டேன் =D