Prof

Monday, April 11, 2016

ஒரு திருமண வரவேற்பில் மணமக்களுக்கு அன்பளிப்பும், அதனுடன் இணைந்த ஒரு கடிதம் வந்தது. அதில் ஊரின் சிறந்த திரை அரங்கில், புதிய படத்துக்கான இரண்டு டிக்கெட்டுகள் இணைக்கப்பட்டிருந்தன.
மேலும் ,''இதை அனுப்பியவர் யார் என்று கண்டு பிடியுங்கள்,பார்க்கலாம்,
''என்றொரு குறிப்பும்" இருந்தது.
தம்பதிகள்இருவரும் எவ்வளவோ சிந்தித்துப் பார்த்தும் அவர்களால்
யார்?? என்று கண்டு பிடிக்க முடியவில்லை. இருந்தாலும்
இலவசமாக. வந்த டிக்கெட்டை எடுத்துக்கொண்டு இருவரும் அந்த திரைப்படத்தை குறிப்பிட்ட நாளில் பார்த்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினர்.
வீட்டை திறந்தவர்களுக்கு
ஒரே அதிர்ச்சி !!!
வீட்டிலிருந்த விலை உயர்ந்த பொருட்கள் எல்லாம்கொள்ளையடிக்கப் பட்டிருந்தன. வீட்டில் ஒரு கடிதமும் இருந்தது. அதில்,'' என்னா?? படம் சூப்பரா..
என்று எழுதியிருந்தது. அவர்களது தேடலுக்கு பதில் கிடைத்தது
ஐயோ...! ''களவாணிப்பயலா''
அவன்....? என்று....

நீதி: ''இலவசம்'' யார் கொடுத்தாலும் அது கொள்ளை அடிப்பதற்கே . உலகில்
இலவசம் என்று எதுவும் இல்லை....
Just think and
vote May 16👍

Saturday, April 9, 2016

Doctor story

ஒரு நாள், காதர் பாயின் இடது கால் நீல
நிறத்தில் மாறி விட்டது. பயந்து போய் ஊரில்
உள்ள மிகப்பெரிய மருத்துவமனைக்கு
சென்று மருத்துவரை அணுகி ஆலோசனை
கேட்டார். பரிசோதனை செய்து விட்டு
காலில் விஷம் ஏறி விட்டது என்றும் காலை
அகற்ற வேண்டும் எனவும் சொல்ல, அதிர்ச்சி
அடைந்த காதர் பாய் தயக்கத்துடன் வேறு
வழியின்றி காலை எடுத்துவிட ஒத்துக்
கொண்டார். சில நாட்களுக்குப் பிறகு வலது
காலும் நீல நிறத்தில் மாற, மீண்டும் அதே
மருத்துவமனைக்கு சென்றார். வலது
காலிலும் விஷம் ஏறி விட்டது என்று
சொல்லி அந்தக் காலையும் அகற்ற வேண்டும்
என மருத்துவர் சொல்லி விட, நொந்து போன
காதர் பாய் அதற்கும் ஒத்துக் கொண்டார். இரு
கால்களையும் இழந்து, கட்டை கால்களுடன்
நடமாட ஆரம்பித்த பாய்-க்கு சில
நாட்களுக்குப் பிறகு மீண்டும் அதிர்ச்சி.
கட்டைக் கால்களும் நீல நிறத்தில் மாறி விட,
பதற்றத்துடன் மருத்துவரை அணுக,
மருத்துவருக்கு கட்டைக் கால்களில் விஷம்
எப்படி ஏறியது என்று ஒரே ஆச்சரியம். மீண்டும்
ஆரம்பத்தில் இருந்து அனைத்து வகையான
உடல் பரிசோதனைகளையும் முடித்த பின்
மருத்துவர் சொன்னார், "காதர் பாய், உங்கள்
லுங்கி சாயம் போகிறது, மன்னித்து
விடுங்கள்"..

இதுதான் இன்றய மருத்துவர்களின் நிலை பாடு... சிரிப்பதற்கல்ல... சிந்திக்க....

Friday, April 8, 2016

T20 WC final 2016

சுத்தி வளைச்சிப் பேச
விரும்பல்ல.மேற்கிந்திய அணியைப்
பாத்துக் கேக்கிறன். Cricket
விளையாடுறயா இல்ல Baseball
விளையாடுறயா? என்ன
பண்ணான் indian team காரன்?
என்னையா தப்பு பண்ணான்?
ஏதோ semifinal ல 193 target
வெச்சான். அதுக்கு நீயும் இந்த
match ல ஒரு 150 இல்லண்ணா 160
chase வெச்சிட்டு விட்டுட
வேண்டியதுதானே?!
அதானேய்யா ஒலக வழக்கம். அத
விட்டுட்டு
கதறக் கதற 196 அடிச்சித்
தொவச்சிருக்கீங்க. அட அது
பறவாயில்லய்யா, ஆனா
பின்னால இருந்த russel
எல்லாம் அனுப்பி six அடிச்சிப்
பழகிக்கடா எண்டு சொல்லி
அசிங்கப்படுத்தி இருக்கீங்க
நீங்க. இது match ஆ
இல்லண்ணா நீங்க அடிச்சிப்
பழகுறத்துக்கு coaching time ஆ?
ஏதோ உள்ளூர் ground
எங்கிறதுனால escape
ஆகியிருக்கான்யா indian team.
ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆகி
இருந்தா இந்த team அ யாரு
காப்பாத்துறது அத நம்பி
இருக்கிற supporters அ யாரு
maintain பண்றது? இவ்வளவு
ஏன் முன்னாடியும் மத்த team
களோட இது மாதிரி சம்பவம்
நடந்திரிக்கிது. இதே team எ ஒரு
நாட்டுக் காரன் (Australia) வச்சி அடி அடி
எண்டு அடிச்சிரிக்கான்யா. ஆனா
அவன் இந்த அளவுக்கு எங்க
சொந்த நாட்டிலேயே அசிங்கப்
படுத்தல. அவனோட
நாட்டுக்குக் கூட்டிக்கிட்டுப்
போய் வலி தெரியாம அடிச்சிப்
பிரிச்சு மேஞ்சிருக்கான்.
அதுவும் பிள்ளக்கி வலிக்கக்
கூடாது எங்கிறதுக்காக T20 ல
ஒண்ணு ரெண்டு match ல
எங்கள வெல்ல வெச்சிட்டு
அப்புறமா அடிச்சிக்கிருன்
கான்யா. அந்த நாகரிகம் கூடவா
ஒனக்குத் தெரியாது? என்னா
அடி, bit gap கூட குடுக்காமப்
போட்டு அடிச்சிருக்க நீயி.
எப்படியெல்லாம் Ball போட்டுப்
பாத்தான். இரக்கமில்லையா
உனக்கு. அவன் தொடந்து
ரெண்டு no ball
போடும்போதே தெரியல்லையா
பைய பயத்துல பேதி ஆயிட்டான்
எண்டு. வேணா! எங்ககிட்ட
வேணா. எங்களுக்கும் இந்த
மாதிரி Cricket தெரியும் ஆனா
நாங்க அடிக்க மாட்டம்,
அடிக்கவும் தெரியாது...

உடம்பைக் குறைக்க

"உடம்பைக் குறைக்க சின்னதா எளிமையா ஒரு எக்ஸர்ஸைஸ்"

"என்ன அது?"

"வெரி சிம்பிள்! தலைய இடதுபக்கமாகவும் வலதுபக்கமாகவும்  வேண்டாமென்று சொல்வதுபோல் ஆட்டினால் போதும்"

"இத எப்பெல்லாம் செய்யணும்?"

"யாராவது.. எதாவது சாப்பிடக் குடுக்கும்போது மட்டும் செய்தால் போதும்"                                       😊😊😊😬😬😬😬

A Dought

டாடி எனக்கு ஒரு டவுட்டு

கிரிக்கெட்ல நம்மள

நல்லா ஏமாத்தறாங்கப்பா ...

எப்படி தெரியுமா..!!

1. கையில Ball-ஐ வெச்சுகிட்டே

No Ball-ன்னு சொல்வாங்க.,

2. ஒரு Over-க்கு ஆறு Ball-ன்னு

சொல்வாங்க., ஆனா ஒரு Ball

தான்

இருக்கும்.

3. All Out-ன்னு சொல்லுவாங்க..,

ஆனா 10 பேர் தான் Out ஆகி

இருப்பாங்க..

4.அம்பயர் ஒரு கைய தூக்கினா

ஒரு Batsman அவுட்..,

ரெண்டு கையயும் தூக்கினா Six..

( லாஜிக் இடிக்குதே..!! )

5. Goal Keeper-ன்னா கோல் விழாம

தடுக்கணும்.. அப்ப.., Wicket

Keeper

விக்கெட் விழாம தடுக்கணும்

தானே…!

ஆனா அவரே ஏன் Out

பண்ணுறாரு..?

6. சில ஒவர் மட்டும் Powerplay-

னு சொல்றாங்களே..

அப்போ, மீதி ஒவர் எல்லாம் பவர்

இல்லாம

இருட்டிலயா விளையாடுறாங்க??

7. ஒருத்தரை மட்டும் Night

Watchman-னு

சொல்வாங்க.. ஆனா அவரும்

மேட்ச் முடிஞ்ச

Ground-ஐ காவல் காக்காம

ரூம்க்கு தூங்க

போயிடுவாரு..

8. Tea Break-னு சொல்வாங்க..

ஆனா

கூல் ட்ரிக்ஸ் தான் குடிப்பாங்க..

9. என்னதான் எல்லா பக்கமும்

Light எரிஞ்சாலும்.,

ஒரு பக்கத்தை மட்டும்

“OFF ” Sideனு தான் சொல்வாங்க..

10.ஆட்டம் முடிஞ்ச

உடனே ஒருத்தரை

மட்டும் தான் ” Man of the Match “-

ன்னு

சொல்லுறாங்க.. அப்ப

மீதி பேரெல்லாம்

Women-ஆ..?

சொல்லுங்கள்

டாடி சொல்லுங்கள்...

Emergency no.s in SL

💠Emergency and Hotline Numbers in Sri Lanka💠

☎ Toll Free 3 Digit Telephone Numbers☎

📞 110 – Ambulance
📞 111 – Fire and Rescue
📞 114 – Sri Lankan Army Operational Commander Colombo
📞 115 – Colombo Municipal Council-Operational Unit
📞 116 – Sri Lanka Air Force Emergency Service
📞 118 – National Help Desk (Ministry of Defence)
📞 119 – Police Emergency Service<

☎ Telephone area code Numbers☎

📞 011 – Colombo
📞 031 – Negombo
📞 038 – Panadura
📞 055 – Badulla
📞 021 – Jaffna
📞 032 – Puttalam
📞 041 – Matara
📞 057 – Bandarawela
📞 023 – Mannar
📞 033 – Gampaha
📞 045 – Ratnapura
📞 063 – Ampara
📞 024 – Vavuniya
📞 034 – Kalutara
📞 047 – Hambantota
📞 065 – Batticaloa
📞 025 – Anuradhapura
📞 035 – Kegalle
📞 051 – Hatton
📞 066 – Matale
📞 026 – Trincomalee
📞 036 – Avissawella
📞 052 – Nuwara Eliya
📞 067 – Kalmunai
📞 027 – Polonnaruwa
📞 037 – Kurunegala
📞 054 – Nawalapitiya
📞 081 – Kandy




☎ Four 4 Digit Telephone Numbers ☎


📲 1900 – Telecommunications Regulatory Commission (Telecommunication complaints)
📲 1901 – Ministry of Power and Energy (Power Interruption complaints)
📲 1905 – Ministry of Public Administration and Home Affairs
📲 1909 – Telecommunications Regulatory Commission (Check mobile IMEI numbers and confirm)
📲 1910 – Lanka Electricity Company (Power Interruption complaints)
📲 1911 – Department of Examinations
📲 1912 – Sri Lanka Tourism
📲 1918 – Ministry of Higher Education
📲 1919 – Government Information Centre
📲 1920 – Ministry of Agricultural Development and Agrarian Services (Agricultural Information)
📲 1922 – State Mortgage and Investment Bank
📲 1929 – Ministry of Child Development and Women’s Affairs (Child Help Line)
📲 1933 – Sri Lanka Police Department (CID Operations Unit)
📲 1938 – Ministry of Child Development and Women’s Affairs (Women Help Line)
📲 1939 – National Water Supply & Drainage Board
📲 1948 – National Authority on Tobacco & Alcohol
📲 1949 – Associated Newspapers of Ceylon Limited (Lake House)
📲 1954 – Commission to Investigate Allegations of Bribery or Corruption
📲 1955 – National Transport Commission
📲 1962 – Department of Immigration and Emigration
📲 1969 – Expressway Emergency
📲 1970 – Department of Pensions
📲 1979 – SriLankan Airlines Ltd.
📲 1984 – National Dangerous Drug Control Board
📲 1987 – Ceylon Electricity Board
📲 1989 – Sri Lanka Bureau of Foreign Employment
📲 1990 – Med1 (Pvt) Limited (Emergency Medical Services & Doctor at Home Care)
📲 1991 – Ministry of Environment and Renewable Energy

  ☎ Toll free numbers ☎

Hotline Numbers of Major Telephone and Internet Service Providers


📞1212 – Sri Lanka Telecom

📲 0117100100 – Dialog Broadband Networks

📞 1575 – Lanka Bell

🖲 Mobile Telepone Hotlines 🖲

📲 1717 – Mobitel
📲 1727 – Etisalat
📲 1755 – Airtel
📲 1777 – Dialog
📲 1788 – Hutch

Monday, March 7, 2016

School life




ஞாபகம் இருக்கா.
?
"டக்" "டக்" யாரது..?
"திருடன்"
"என்ன வேனும் ...?
" நகை வேனும்..!!
"என்ன நகை..?
" கலர் நகை...!!
"என்ன கலர்...??
" பச்சை கலர்...!!!
"என்ன பச்சை..??
" மா" பச்சை...
"என்னம்மா..?
" டீச்சரம்மா..!
"என்ன டீச்சர்...?
" கணக்கு டீச்சர்..!
"என்ன கணக்கு..?
" வீட்டு கணக்கு..!!
"என்ன வீடு...??
" மாடி வீடு..!!!
"என்ன மாடி ...?
" மொட்ட மாடி...!
"என்ன மொட்ட..??
" பழனி மொட்ட...!
"என்ன பழனி..??
" வடபழனி...!!
"என்ன வட..?
" ஆமை வட..!!
"என்ன ஆமை..?
" கொளத்தாம ..!!
"என்ன குளம்...!!
" த்திரி குளம்..!!
"என்ன திரி..??
" விளக்கு திரி..!!
"என்ன விளக்கு ..??
" குத்து விளக்கு ...!
"என்ன குத்து..??
" கும்மாகுத்து..!!!/
.
சுகமான வலிகளை தரும்
பள்ளி தருணங்கள்...
அம்மாவிடம் இருந்து பிரிந்து போக
முடியாமல்
அழுத தருணம்
நாலு பேர்
சேர்ந்து நம்மை பள்ளிக்கு இழுத்து சென்றாலும்
நம் வீட்டையே திரும்பி திரும்பி பார்த்த
தருணம்
வேர்வையை சட்டையிலே துடைத்துவிட்டு விளையாடிய
தருணம்
ஆசிரியர் அடித்தால் வலிக்க
கூடாது என்பதற்காக
இரண்டு கால்சட்டையை போட்டு பள்ளிக்கு சென்ற
தருணம்
என்னிடம் ரப்பர் வைத்த பென்சில்
இருக்கிறது என பெருமைபட்ட தருணம்
புதிதாக வாங்கிய
பேனாவை நண்பனிடம்
காட்டி சந்தோஷபட்ட தருணம்
வகுப்பு நடைபெறும் போது நண்பனிடம்
புத்தக கிரிக்கெட் விளையாடின
தருணம்
நண்பர் மை இல்லாமல் தவிக்கும்
போது பெஞ்சின் மேல்
மை தெளித்து உதவிய தருணம்
போர்டில் நம்ம பெயர் மி.மி.அ என்ற
பட்டத்துடன் இருந்தால் நான் தாம்ல இந்த
வகுப்புக்கு ரவுடி என
சொல்லிக்கொண்ட தருணம் (மி.மி.அ-
மிக மிக அடங்கவில்லை)
சனி,ஞாயிறு விடுமுறை என்றாலும்
மழைக்காக விடுமுறை விட்டால்
அளவில்லாத சந்தோஷத்தில்
துள்ளி குதித்திருப்போம்
எல்லா நாட்களும் தாமதமாக செல்லும்
நாம் பிறந்த நாள் என்றால் மட்டும்
சீக்கிரமாவே பள்ளிக்கு செல்ல
துடித்திருப்போம்.������
விடுமுறை நாளில் பிறந்த நாள்
வந்தால் வருத்தப்படுவோம்
அனைவரது சாப்பாட்டையும் சாதி,மத
பேதம் பார்க்காமல்
பகிர்ந்து உண்டு மகிழ்ந்தோம்
ஒன்பது மணி ஆனால் வருத்தப்பட்டோம்,
நான்கு மணி ஆனால் சந்தோஷபட்டோம்...
இப்போ அந்த நாளுக்காக
ஏங்கி நிற்கின்றோம்...!!!
இதை நீங்கள் அனுபவித்திருந்தால் பகிருங்கள்....

எல்லா தத்துவத்தையும் ஷேக்ஸ்பியர் மட்டும்தான் சொல்லனும் னு எதிர்பார்க்காதீங்க

Laughter; The Best Medicine!!

வாழ்க்கை தத்துவம்:-  "

நம் சட்டையின் முதல் பட்டனை தவறாக போட்டுவிட்டால்... பின் வரும் எல்லா பட்டன்களும் தவறாகவே அமையும்!" ......

சொன்னவர் :

தொளபிக் டெய்லர் '.    

😂எல்லா தத்துவத்தையும் ஷேக்ஸ்பியர் மட்டும்தான்  சொல்லனும் னு எதிர்பார்க்காதீங்க!)

Monday, February 29, 2016

டாக்டர் தலையில் கை வைத்துக்கொண்டு அமர்ந்து விட்டார்

்த சிறுவன் அவர்கள் மகனா?

இரண்டு நாள்
கழித்து தினசரி பத்திரிக்கையில் அந்த
செய்தி விபதுக்குள்ளான பெண்
இறந்து விட்டாள் என்று.
நான்
அவரது இறுதி சடங்கிற்கு சென்றேன்
அச் சிறுவனின் அம்மா சடலமாக
கிடந்தாள் , கையில் சிறுவனின்
புகைப்படமும் அந்த பொம்மையும்
இருந்தது. அங்கிருத்து கனத்த
இதயத்துடன் திரும்பினேன் அந்த
சிறுவனின் தன் அம்மாவிடமும்
தங்கையிடம் வைத்திருந்த அன்பும்
பாசமும் அப்படியே உள்ளது. ஆனால்
ஒரு குடிகாரன் குடி போதையில் வாகனம்
ஒட்டியதால் ஒரு நொடியில் அந்த
குடும்பம் சிதைந்து விட்டது

தயவு செய்து மது அருந்தி விட்டு வாகனம் ஓட்ட வேண்டாம் உங்கள் இதயத்தை இது தைத்திருந்தால் பகிருங்கள் ...

சம்பவம்-6
----------------
ஒரு போக்குவரத்து சமிக்ஞையில் ஒரு
ஊனமுற்ற சிறுமி நின்று கொண்டிருந்தாள்
அங்கு ஒரு கார் வந்து நின்றது. அந்த சிறுமி
சிறிது நேரம் அந்த காரில் உள்ள நபரை உற்று
பார்த்துக்கொண்டிருந்தாள்.
பின்னர் அந்த காருக்கு அருகில் சென்று கதவை
தட்டினால். ஜன்னலின் கண்ணாடி
திறக்கப்பட்டது. அங்கு புகை பிடித்தபடி ஒரு
நபர் அமர்த்திருந்தார். கிழிந்த ஆடைகளுடன்
கையில் தடியுடன் இருந்த சிறுமியை பார்த்து
என்னமா ?? காசு வேணுமா?? என்று கேட்டார்.
சிறுமியிடம் இருந்து பதில் வரவில்லை. அந்த
சிறுமி காரில் இருந்த அனைவரையும் சுற்றி
சுற்றி பார்த்தாள். காருக்குள் ஒரு
கைக்குழந்தையுடன் ஒரு பெண்
அமர்திருந்தாள்.
இந்தா பொண்ணு உனக்கு என்ன வேணும்?
என்று கேட்டார்.
எனக்கு எதுவும் வேணாம் அய்யா..
உங்க பசங்களுக்கு நீங்க எல்லாத்தையும்
கொடுக்கணும்னு ஆசை படுறீங்களா அய்யா ?
என்று கேட்டாள்.
ஆமா ஏம்மா இப்படி கேக்குற? என்று கேட்டார்?
உங்க பசங்களுக்கு எல்லாத்தையும் கொடுங்க
ஆனா என்ன மாதிரி அவளுக்கும் வறுமையை
கொடுத்துறாதீங்க அய்யா.
இன்னைக்கு நீங்க என்ன பிச்சைக்காரின்ன
ு நினைச்சமாரி நாளைக்கு உங்க மகளை யாரும்
நினைத்து விட கூடாது இந்த புகை பிடிக்கும்
பழக்கத்தை இன்றோடு விட்டுத்தள்ளுங்கள்
அய்யா. உங்களைப் போன்ற ஒரு அப்பா எனக்கு
இருந்ததால் தான் நான் இன்று உங்கள் முன்
நிற்கிறேன் ஒருஅனாதையாய் ஒரு
பிச்சைக்காரியை போல்.
இந்த நிலை உங்கள் மகளுக்கும்
வரவேண்டுமா? என்று கேட்டாள் அந்த சிறு
பெண்.
சட்டென்று சிகரட்டை கிழே போட்டார். என்ன
அய்யா ? சிகரட் சுட்டுருச்சா ? என்று அந்த
சிறுமி கேட்க்க..
"இல்ல அம்மா நீ சொன்ன வார்த்தைகள் தான்
என்னை சுட்டு விட்டது என்றார்."

suttazu
அது ஒரு மனநல மருத்துவமனை.... அங்கே அழகன் என்ற பெயருடைய ஒருவர் சிகிட்சைப் பெற்று வந்தார்.

ஒருநாள் ஒரு சக மனநோயாளி கிணற்றில் குதித்து விட்டதால், தன் உயிரைத் துச்சமென நினைத்துக் கிணற்றில் குதித்து அந்த நோயாளியைக் காப்பாற்றி விட்டார் அழகன்.

அதைக் கேள்விப்பட்ட மருத்துவர் அழகனை அழைத்து, “உனக்கு ஒரு நல்ல செய்தியும், ஒரு துக்கமான செய்தியும் சொல்லப் போகிறேன்“ என்றார்.

உடனே அழகன், “சொல்லுங்க டாக்டர்“ என்றான்.

“நீ உனது நண்பனைக் காப்பாற்றியதால் நீ சுகமடைந்து விட்டாய் என்று நினைக்கிறேன். நீ வீட்டுக்குப் போகலாம். இது நல்ல செய்தி“ என்றார்.

பிறகு, “துக்கமான செய்தி: நீ கிணற்றில் குதித்துக் காப்பாற்றிய உன் நண்பன் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டான்“ என்று டாக்டர் சொல்லி முடித்ததும் அழகன் ஆர்வமுடன் சொன்னான்,

“டாக்டர்.... அவன் சாகவில்லை. கிணற்றில் விழுந்து நனைந்தவனை ஈரம் காயட்டும் என்று நான் தான் அவனது கழுத்தில் கயிற்றைக்கட்டி மரத்தில் தொங்கவிட்டு இருக்கிறேன். ஈரம் காய்ந்ததும் அவன் சுகமாகி விடுவான்“ என்றான்.

டாக்டர் தலையில் கை வைத்துக்கொண்டு அமர்ந்து விட்டார்.
 😜😆😆🙆🙆💉💊

அதிகாலை சுப்ஹ் தொழுகை


****************************

அதிகாலைத் தொழுகைக்குச் செல்லும் ஒருவரைப் பார்த்து இறைவன் வியக்கும்காட்சியை நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வாறு விவரிக்கின்றார்கள்:

“படுக்கை, போர்வை,மனைவி, மக்களின் அரவணைப்பு அத்தனையையும் உதறிவிட்டு அதிகாலையில் எழும்மனிதனைப் பார்த்து இறைவன் வியப்படைகின்றனான்.

வானவர்களிடம் கேட்கின்றான்:“வானவர்களே! எனது இந்த அடியானைப் பாருங்கள்..!
படுக்கை, போர்வை, மனைவி,மக்கள் அத்தனையையும் உதறி-விட்டு அதிகாலையில் எழுந்துவிட்டான். எதற்காக..?என்ன வேண்டும் இந்த அடியானுக்கு..?

எனது அருள்மீது ஆசை வைத்தா…? எனதுதண்டனையைப் பயந்தா…?”

பின்னர் வானவர்களிடம் அல்லாஹ்வே கூறுகின்றான்:“உங்களை சாட்சி வைத்துக் கூறுகின்றேன்: அவன் ஆசைப்பட்டதை நான் அவனுக்குநிச்சயம் கொடுப்பேன். அவன் எதைப் பயப்படுகின்றானோ அதிலிருந்து நிச்சயம்அவனுக்கு நான் பாதுகாப்புக் கொடுப்பேன்.”

நூல்;-(அஹ்மத்)

இன்று சுப்ஹ் தொழுதீர்களா?

நாளை சுப்ஹ் தொழுவீர்களா?

அல்லாஹ்வின் கவனத்தை ஈர்க்கும் சுப்ஹ் தொழுகையை தொழ நீங்கள் தயாரா?

Sunday, February 28, 2016

Question for LLB entrance exam

இன்று நடைபெற்ற திறந்த பல்கலைக்கழக LLB நுழைவுப்பரீட்சையில் கேட்கப்பட்ட பொதுஅறிவு வினாக்களில் சில....
1-உலகில் அதி கூடிய எண்ணைவள நாடு?
2-உலகின் செல்வந்தநாடு?
3- ISIS அமைப்பு தலைவர் பெயர்?
4-ஒருநாள் சர்வதேச கிறிக்கட்போட்டியில் அதி கூடிய ஓட்டம் பெற்றவர்?
5-சிறுவர் குற்றம் புரிவோர் எவ்வரச திணைக்களத்தினால் கையாளப்படுகின்றனர்?
6-தேர்தல்மூலம் தேர்ந்தெடுக்கப்
படாத இலங்கை குடியரசு தலைவர் (ஜனாதிபதி)?
7-அரசியல் யாப்புகளுக்கு நியமிக்கப்பட்ட
குடியியல் சமூகத்தைப் பிரதிநிதிப்படுத்தும் 3 உறுப்பினர்களில் ஒருவர் பெயர்?
8-இலங்கையில் மாகாண மேல்நீதிமன்றத்தால் அறிமுகப்படுத்திய 1978ம் ஆண்டின் அரசியல் அமைப்பு திருத்தம் யாது?
9-இலங்கையில் இலவசக்கல்வி எவ்வருடம் ஆரம்பிக்கப்பட்டது?
10-யாழ்ப்பாண பொதுநூலகம் எவ்வருடம் தீயிடப்பட்டது?
11-சர்வதேச மனித உரிமைகள் தினம்?
12-இலங்கை திறந்த பல்கலைக்கழகம் 2015ல் நிறுவிய புதியபீடம் எது?
13-கவிஞர் கஜெமன் நோனாவின் உண்மைப்பெயர்?
14-இந்துசமயத்தில் செல்வத்தைக்குறிக்கும் பெண் கடவுள் பெயர்?
15-மின்னேரியாக்குளத்தை நிர்மாணித்த அரசன்?
16-அரபு இலக்கத்தில் எம் 48ஐ எழுதுக.?
17-தற்போதைய குற்றவியல் சட்டப்படி குறிப்பிட்ட வயதுக்கு குறைவான பெண் ஒருவருடன் அவரின் சம்மதம், சம்மதமின்றி உடலுறவு கொள்வது கர்ப்பழிப்பு குற்றமாகும் அவ்வயது எது?
18-இலங்கையில் எந்த முன்னிலையில் நீதிமன்றம் விவாகரத்து வழங்குவதற்கான நியாயாதிக்கத்தை
க்கொண்டுள்ளது?
19-2015 இல் இலக்கியத்திற்கான நோபல்பரிசுபெற்ற ஸ்வெட்லான அபேசன் றோவ்னா அலெக்ஸ்யேவிச் எந்த நாடு?
20-2014 உலகின் முதன்முதலாக தீர்க்கமுடியாத நோயுள்ள எவ்வயதினரையும் சட்டப்படி மரணிப்பதை அனுமதித்த நாடு?
21-சவுதிஅரேபியாவில் புழக்கத்தில் உள்ள நாணயம்?
22-பல்கலைக்கழக பீடமொன்றில் பிரதான நிர்வாக மற்றும் கல்விசார் தலைவர் யார்?
23-இ. திறந்த பல்கலைக்கழகத்தின் தற்போதைய உபவேந்தர்?
24-பராமரிப்பு வழக்குகளை விசாரிக்க நியாயாதித்கம் கொண்டுள்ள முதல்த்தர நீதிமன்றம் எது?
25-இலங்கையின்கீழ் நீதிமன்ற நீதிபதியின் ஒழுக்காற்று விடயங்கள் தொடர்பாக கட்டுப்பாட்டு அதிகாரம்கொண்ட அரதநிறுவனம் எது?
26-மனித உடலில் உள்ள முக்கிய உறுப்பு ஒன்று ஒழுங்கற்று செயற்பட ஆரம்பிக்கும்போத
ு நீரழிவு நோய் ஏற்படுகிறது. அந்த உறுப்பு எது?
27-இலங்கை சிறுவர்களுக்கு உதவியளிப்பதற்காக அவசர தொலைபேசி?
28-சதுரங்க விளையாட்டில் king தாக்கத்துக்குள்ளாகி ஏனைய சதுரங்களுக்கு நகர முடியாத நிலமையை குறிக்கப்பயன்பட
ும் சொல்?
29-2006 ல் நாசாவினால் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட எவ்விண்கலம் 2015ல் புளுட்டோ கிரகத்திற்கு அண்மையில் பயணம் செய்தது?
30-ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் பெயர்?
31-உலகப்புகழ்பெற்ற மோனாலிசா ஓவியத்தை வரைந்தவர்?
32-2014 ஒஸ்கார் திரைப்படவிழாவில் பரிசு பெற்ற திரைப்படம்?
33-வில்லியம் சேக்ஸ்பியரின் ஷய்லோக் என்ற பாத்திரம் அவரின் எந்த நாடகத்தில் காணலாம்?
34-பிரான்சிய புரட்சியின் பின் 1789ல் புரட்சியினரால் அழிக்கப்பட்ட பிரசித்திபெற்ற சிறைச்சாலை எது?
35-1922ல் சித்தார்த்த எனும் நாவலை எழுதிய ஜேர்மனிய எழுத்தாளர் யார்?
Answer
1.Venezuela
2.Quatar
3..Abubakkar Al Bagdadi
4.Rohith Sharma
5, NCPA
6.D.B.Wijeythunga
7.Radika kumaraswami
8.13th Amendment
9..1945
10..1981
11..December 10th
12. faculty of health science
13..Dona Issabella Carolina
14..Lakshmi
15..Mahasenan
16.XLVIII
17..16 Years
18..District court
19.Belarus
20.Netherland
21.Riyal.
22 Dean
23.prof Ariyadurai
24.Magistrate court
25. Judicial service commission
26 Pancreas (சதையி)
27. 1929
28. checkmate
29..New Horizon
30.Zaid Al Hussain
31.Leonardo Davinchi
32..12 Years a slave
33.Merchant of van ice
34..Bastile prison
35. Herman Hesse....

அரசியல் யாப்பு பற்றி

அரசியல் யாப்புத் திருத்தம் – சில ஆலோசனைகள்
by Usthaz Mansoor


அரசியல் யாப்புத் திருத்தம்  என்பது இந் நாட்களில் அதிகமாகப் பேசப் படும், கருத்துப் பரிமாறலுக்கு உட்படுத்தப்படும் விடயமாகும். இது சம்பந்தமான சில கருத்துக்களை முன்வைப்பதே இங்கு நோக்கமாகும். கீழ்வருமாறு ஆலோசனைகள் முன்வைக்கப்படுகின்றன.

நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையின் பாதகத்தை மூன்று ஜனாதிபதிகளின் ஊடாக இலங்கை மக்கள் அனுபவித்துவிட்டார்கள். எனவே அம்முறையை நீக்கி பாராளுமன்ற அதிகாரம் மேம்பட்ட ஆட்சி முறையே சிறந்தது. மிகுந்த ஜனநாயகப் பொருள் கொண்டது.
இன முரண்பாடுகளும் போராட்டங்களுமே மகாண சபை ஒழுங்கைக் கொண்டு வந்தது. ஆனால் அது பாரிய நிர்வாகச் செலவை, நடைமுறை நிர்வாக கடினங்களையும் கொண்டுள்ளது. இ்நத வகையில் மாகாணசபை என்பது பொதுமைப்படுத்தப் படாமல் வட, கிழக்கு போன்ற அவசியம் தேவைப்படும் பகுதிக்கு மட்டும் மட்டுப் படுத்தலே பொருத்தமானது.
நாட்டின் சீர்கேடுகள், இன மோதல்கள் உருவாக அரசயில் தலைமைகளின் சீரின்மை முக்கிய காரணமாகும். எனவே அரசியல் தலைமைகள் தெரிவில் கீழ்வரும் அடிப்படைகள் சட்டமாக்கப்படல் பொருத்தமானது.
குறிப்பிட்டதொரு அறிவுத் தரத்தை ஜனாதிபதி, பிரதமர் முதல் அனைத்து அரசியல் தலைமைகளுக்கும் ஷரத்தாக்கள்.
ஒழுக்க, பண்பாட்டுக் கோவையொன்று அவர்கள் மீது பிரயோகிப்படல், தெரிவின் போதும் தொடர்ந்து அதிகாரத்தில் நிலைக்கவும் இது ஷரத்தாக கொள்ளப்படல்.
இதில் குறிப்பாக இன உணர்வு கூர்மைப்படல், இனத் துவேஷத்தை வளர்த்தல் செயற்பாடுகள் ஒழுக்கத்திற்கு முரணானவையாகக் கொள்ளப்படல்.
அனைத்து பாராளுமன்ற அங்கத்தவர்களதும் பதவிக் காலத்தை வரையறுத்தல். ஜனாதிபதிக்குப் போன்று 2 அல்லது 3 முறையேதான் பதவி வகிக்கலாம் எனக் கொள்ளப்படல். அதன் பின்னர் அவர் பதவி வகிப்பதை முற்றாக தடைசெய்தல் அல்லது 10 வருடங்களின் பின்னரே மீண்டும் தேர்தலில் நிற்கலாம் என்ற ஒழுங்கைக் குறைந்தது கொண்டு வர வேண்டும்.இந்த ஒழுங்கு பல வகையான அரசியல், சமூக சீர் கேடுகளைக் களைய உதவியாக இருப்பதோடு, பல புதிய அரசியற் தலைமைகளுக்கும் இடமளிக்கக் கூடியதாக அமையும்.
ஏற்கனவே அரசியல் யாப்பில் காணப்படும் அரச கொள்கையின் வழிகாட்டிக் கோட்பாடுகளும், தத்துவங்ளும் மிகச் சிறந்தவையாக இருந்தாலும், நடைமுறையில் பிரயோகிக்கத்தக்க சட்ட அந்தஸ்தை அவை பெறாது ஒரு வகை நீர்த்துப் போன அமைப்பில்தான் காணப்படுகின்றன. அவற்றில் மிக முக்கியமானவற்றிற்கு அரசியல் யாப்பில் சட்ட அந்தஸ்தைப் பெற்றுக் கொடுத்தல்.
கீழ் வருவனவற்றை  அவ்வாறு குறிப்பிடலாம்

பொருளாதார சுதந்திரம், உரிமை என்ற வகையில்
இந்நாட்டின் ஒவ்வொரு பிரஜையும்  இந் நாட்டு வளத்தின் பங்குதாரன் என்ற வகையில் போதுமான வாழ்க்கை வசதிகளை அவன் பெறாத போது அதனை முறையிடுவதற்கான வசதியை ஏற்படுத்திக் கொடுத்தல். அதற்கான தீர்வை அரசு
தொழில் பெற்றுக் கொடுத்தல்.
கொடுப்பனவு வழங்கல்.
குறிப்பிட்ட நபரின் வசதியுள்ள குடும்ப அங்கத்தவர்களைப் பொறுப்பாக்கல்.என்ற ஒழுங்குகளில் செய்யலாம்.
வெளிநாட்டுக் கம்பனிகளின் முதலீட்டை, நாட்டின் வளங்களைப் பயன்படுத்துவதை வரையரை செய்தலும், அவற்றின் வருமானத்தின் ஒரு கணிசமான பகுதியை நாட்டில் செலவிடும் ஒழுங்குக்குக் கொண்டு வரலும் . குறிப்பிட்ட ஒரு நாட்டுக்கு மட்டும் தனி ஆதிக்கம் செலுத்த இடமளிக்காதிருத்தலும். இந்த வகையில் தற்போதைய முதலீடுகள் பற்றியதொரு முழுமையான மீள்பரிசீலனைக்கு வரல்.
காணி உச்சவரம்புச் சட்டம் என்பது போல் தனிநபர், கம்பனி பொருளாதார வளப் பயன்பாட்டிற்கும், முதலீட்டு வியாபகத்திற்கும் ஓர் உச்ச வரம்பைக் கொண்டுவரல்.
மக்களின் ஒழுக்கத்தையும், கலாச்சாரத் தரத்தையும் உயர்த்துதல் என்ற கோட்பாட்டிற்கு சட்ட அந்தஸ்தை வழங்கல்:
பாடத்திட்ட கொள்கை ஒன்றை வகுத்தல் அதில் தொழில் நுட்பம் சார் கல்விக்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகூடிய முக்கியத்துவத்தை குறைத்து இலக்கியம், மார்க்கம் சார் பாடங்களுக்கு கலை, விஞ்ஞானம் சார்ந்த எத்துறையாக இருந்தாலும் உயர்தரம் (A/L) வரை இடமளித்தல்.
கல்வி ஒரு பொருளாதாரத் தேடலாக முழுமையாக மாறிச் செல்லும் நிலையைத் தவிர்ப்பதற்கான பாதுகாப்பை யாப்பில் வழங்கல்.
நான் அரசியல் துறை சார்ந்தவனல்ல. என்றாலும் இந்த நாட்டுப் பிரஜை என்ற வகையில் அது பற்றிய கலந்துரையாடலில் கலந்து கொள்ள வேண்டும் என்ற வகையில் இக் கருத்துக்களை முன் வைத்தேன். அரசியல் யாப்பு பற்றிய விரிந்த ஆய்வொன்றை இங்கே நான் முன்வைக்க முயலவில்லை

"பசியோடு இருங்கள்; புதிய சிந்தனைகளோடு வாழுங்கள்"

பசியோடு இருங்கள்" ஸ்டீவ் ஜாப்ஸ்







ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனத்தை தொடங்கியவர்களில் ஒருவரான ஸ்டீவ் ஜாப்ஸ் பிறந்த தினம் இன்று (பிப்.24). கம்ப்யூட்டர் வல்லுநர் என அறியப்பட்ட ஸ்டீவ் ஜாப்ஸ், சிறந்த பேச்சாளர். 2005-ம் ஆண்டு ஜூன் 12-ம் தேதி கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அவரது பேச்சு பலராலும் பாராட்டப்பட்டது.




பட்டமளிப்பு விழாவில் பேசிய ஸ்டீவ் ஜாப்ஸ் "நான் கல்லூரியில் பட்டப்படிப்பை முழுமையாக முடிக்கவில்லை. நான் என் வாழ்வில் தொடர்புடைய மூன்று கதைகளை உங்களுடன் பகிர்ந்தளிக்க விரும்புகிறேன்" என்றார். அந்த மூன்று கதைகள் உங்களுக்காக...




முதல் கதை




நான் பிறக்கும் போது எனது தாய், தந்தை படித்துக் கொண்டிருந்தனர். என்னை மற்றொருவருக்கு தத்துக் கொடுத்தனர். அவர்கள் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், என்னை குறையின்றி வளர்த்தனர். அப்போது படிப்பை தொடர வேண்டாம் என முடிவெடுத்தேன். நண்பர்கள் உதவியுடன் அவர்கள் வீட்டின் தரையில் படுத்தேன். கோவில்களில் சாப்பிட்டேன். கஷ்டங்கள்தான் என்னுள் இருந்த உள்ளுணர்வையும் தன்னம்பிக்கையும் வளர்த்தன. பத்து ஆண்டு உழைப்பின் பயனாக, 'மெகின்டோஷ்' கம்ப்யூட்டரை வடிவமைத்தேன். எனது முதல் கம்ப்யூட்டர் 'டைப்போகிராபி' (அச்சுக் கலை) கொண்டது.




2-வது கதை




நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. 20 வயதில் என் வீட்டில் ஆப்பிள் நிறுவனத்தை துவக்கினேன். 10 ஆண்டு உழைப்பிற்கு பின்,  2 பில்லியன் டாலர்களுடன் 4,000 பேரை வேலையில் அமர்த்தியது என் நிறுவனம். 30 வயதில் என்னுள் எழுந்த வெறிக்கு அளவே இல்லை. அப்போது என் நிறுவனத்திலிருந்து நான் வெளியேற்றப்பட்டேன். வாலிப பருவத்திற்கு மீண்டும் தள்ளப்பட்டேனா என என்னுள் கேள்விகளை கேட்டுக் கொண்டேன். அடுத்த ஐந்து ஆண்டுகளில் 'நெக்ஸ்ட்' மற்றும் 'பிக்ஸர்' ஆகிய நிறுவனங்களை துவக்கினேன். அப்போதுதான் என் வாழ்வில் காதல் மலர்ந்தது. "பிக்ஸரில்' முதல் கம்ப்யூட்டர் அனிமேஷன் சினிமாவான "டாய் ஸ்டோரி' உருவானது. இன்று உலகின் சிறந்த அனிமேஷன் ஸ்டூடியோவாக இது உள்ளது. சில காலம் கழித்து ஆப்பிள் நிறுவனம், "நெக்ஸ்ட்டை' வாங்கியது. நான் மறுபடியும் புதிய உத்வேகத்துடன் ஆப்பிளில் இணைந்தேன்.




மூன்றாவது கதை




சிறு வயதில் ஒரு வாசகம் எனக்கு ரொம்ப பிடிக்கும். "உங்கள் வாழ்வின் ஒவ்வொரு நாளையும் இறுதி நாளாக நினைத்து வாழ்ந்தால், ஒரு நாள் அது நிறைவேறும்' என்பதே அந்த வாசகம். இதை நான் எப்போதும் கடைபிடிப்பேன். தினமும் காலையில் எழுந்து கண்ணாடியில் முகம் பார்க்கையில் இன்றே நமக்கு இறுதி நாள் என்று நினைத்துக் கொண்டு வேலைகளை துவக்குவேன். கடந்த ஆண்டு எனக்கு கணையத்தில் புற்றுநோய் இருப்பது, பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது கணையம் என்பது என்ன என்று கூட எனக்கு தெரியாது. டாக்டர்கள் என்னிடம், இது குணமாக்க இயலாத நோய். உங்களின் வாழ்நாள் இன்னும் மூன்று அல்லது ஆறு மாதங்கள் மட்டுமே என்றனர். அதன் பின் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது நான் நலமாக உள்ளேன். ஆனால், எனது வாழ்நாள் இறுதிக் கட்டத்தை நோக்கி செல்வது எனக்கு தெரியும். உங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் குறைவு. அதை வீணாக்காதீர்கள். மற்றவர்கள் கூறிய கருத்துகளை வேதவாக்காக கொண்டு, வாழ்க்கையை நிர்ணயிக்காதீர்கள். உள்ளுணர்விற்கு மதிப்பளியுங்கள்.





"பசியோடு இருங்கள்; புதிய சிந்தனைகளோடு வாழுங்கள்". இந்த வாசகத்துடன் உரையை முடித்தார்.

Friday, February 26, 2016

குழந்தை வளர்ப்பு ஒரு கடமை அல்ல. அது ஒரு கலை. கலை மட்டுமல்ல, அது அறிவியலும்கூட.

பெற்றோர்கள், தயவுசெய்து படிக்க வேண்டுகிறேன்...

நடிகர் விவேக் தனது மகனின் நினைவாக பெற்றோர்களுக்கு விடுக்கும் வேண்டுகோள்...

அருமைப் பெற்றோரே... உங்களுக்கு சில வார்த்தைகள்..!

குழந்தை வளர்ப்பு ஒரு கடமை அல்ல. அது ஒரு கலை. கலை மட்டுமல்ல, அது அறிவியலும்கூட. குழந்தைகள் உங்களால் வரவில்லை. உங்கள் மூலம் வந்தார்கள். அவர்களிடம் நன்றியோடு இருங்கள். அவர்கள் உங்கள் வாழ்வின் ஆதாரம். உங்கள் கனவுகளை அவர்களிடம் திணிக்காதீர்கள். அவர்களது அபிலாஷைகள் என்னவென்று கண்டுபிடியுங்கள்.

உங்கள் நிறைவேறா கனவுகளை உங்கள் குழந்தைகளுக்குள் வலுக்காட்டாயமாக விதைக்க வேண்டாம். கார் மெக்கானிஸத்தில் காதல்கொண்ட மகனை டாக்டர் ஆக்கப் போராடாதீர்கள். ஆட்டோமொபைல் என்ஜினீயரிங்க்குப் பச்சைக்கொடி காட்டி, தொடர்ந்து பக்கபலமாக இருங்கள். அவன் வாழ்வு ஒரு மகிழ்ச்சிப் பூங்கா ஆவதைப் பார்ப்பீர்கள். தோனியைப் பார்த்துவிட்டு, பையனை கிரிக்கெட் கோச்சிங் அனுப்பாதீர்கள். அவனுக்கு ஓவியத்தில் விருப்பம் இருக்கலாம். டென்னிஸில் காதல்கொண்ட மகளை பரதநாட்டியத்துக்கு அனுப்பி டார்ச்சர் செய்ய வேண்டாம்.

அவர்கள் ஆன்மிகமும் படிக்கட்டும்; அனிருத்தும் கேட்கட்டும். வீட்டுக்குள் அடைத்து, ஏ.சி. ரூமில் டிவி பார்த்துக்கொண்டே சிப்ஸ் கொறிக்க வைக்க வேண்டாம். தெருவில் இறங்கி, புழுதியில் விளையாடி, வேர்த்து விறுவிறுத்து வீடுவந்து சேரட்டும். அவர்களுக்கு கம்யூனிட்டி தெரிகிறதோ இல்லையோ இம்யூனிட்டி அதிகரிக்கும். அவர்கள் எல்லாவற்றையும் பார்க்கட்டும், கண்கள் விசாலமானால், இதயம் விசாலம் ஆகும்!

பெண் குழந்தைகளை வீரத்தோடு வளர்த்தெடுங்கள். எதிர்காலம் புதிர்காலமாகும் சூழலில், அவர்கள் எதிர்த்துப் போராட வேண்டியிருக்கலாம். ‘ரேப்பிஸ்ட்’களுக்கு உதவித்தொகையும், தையல் மெஷினும் வழங்கும் ஜனநாயகம் இது. பெண்கள், அவர்களே தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

மஞ்சள், வேம்பு, துளசி, நிலவேம்பு... இவை உயிர், உடல் காக்கும் நம் மண்ணின் மூலிகைகள். அதை நம் பாட்டி கொடுத்தபோது வாங்கிக் குடித்தோம். நம் பிள்ளைகளுக்குக் கொடுக்க மறந்தோம். ஃபார்மஸியில் மாத்திரைகள் வாங்கி விழுங்கினோம். இனியாவது புராதானங்களை மீட்டெடுப்போம். குழந்தைகளுக்கு

ஆரோக்கியமூட்டுவோம், அறிவூட்டுவோம், அன்பூட்டுவோம்!

Thursday, February 25, 2016

"யூத சியோனிச இலுமினாட்டிகளும்” இவ்வுலக அடிமைகளும்…!போலியோ சொட்டு மருந்து மற்றும் தடுப்பூசியும் உலக அரசியலும்!





நம் வீட்டில் ஒரு குழந்தை பிறந்துவிட்டால் போதும் ஒரு பெரிய அட்டவணை வைத்துக்கொண்டு அதற்கு இதற்க்கு என்று ஆயிரத்தெட்டு தடுப்பூசிகள் போடுகிறோம், போதாத குறைக்கு இடை இடையே சொட்டுமருந்துகள் வேறு கொடுக்கிறோம். இதெல்லாம் ஏன் கொடுக்க வேண்டும் என்று நீங்கள் என்றாவது சிந்தித்ததுண்டா ?

எல்லாம் குழந்தைகளின் நல்லதுக்கு தானே அவர்களை உயிர்கொல்லி நோயிலிருந்து பாதுகாக்க தான் என்று நாம் நினைத்தால் நம்மை விட ஏமாளிகள் வேறு யாரும் இருக்க முடியாது.

உலகத்தில் உள்ள உயிர்கொல்லி நோய்கள் அனைத்திற்கும் சேர்த்து நம் குழந்தைக்கு தடுப்பூசி போட்டாச்சு ஆனாலும் மாதம் மாதம் மருத்துவமனைகளுக்கு ஜுரம், வைரஸ் ஜுரம் ,வாந்தி,பேதி, மலேரியா என்று பிள்ளைகளை கூட்டிகொண்டு நடையா நடக்கிறீர்களே உயிர்கொல்லி நோயை எதிர்க்கும் அளவிற்கு தயார்படுத்தபட்ட உங்கள் குழந்தையின் உடம்பினால் சாதாரன ஜுரத்தை கட்டுப்படுத்த முடியவில்லையே ஏன் ? என்று என்றாவது யோசித்ததுண்டா …?

அது வேற ஒண்ணுமில்ல சொல்ல சொல்ல கேட்காம ஐஸ் வாட்டர் குடுச்சான்,பச்ச தண்ணிகுடுச்சா என்று உங்கள் பிள்ளைகளை தான் குறைகூறுவீர்கள். ஆனால் உண்மை என்னவோ அதுவல்ல ..

நீங்கள் எதை உங்கள் பிள்ளைகளின் உடல் நலத்திற்கு நல்லது என்று கூறி தடுப்பூசியாகவோ, சொட்டு மருந்தாகவோ போட்டீர்களோ அதன் பக்கவிளைவுகள் என்றால் உங்களால் நம்ப முடியாது ஆனால் அதைவிட அதிர்ச்சியூட்டும் விஷயம் என்ன தெரியுமா ?

நீங்கள் எந்த நோய் வரக்கூடாது என்று நினைத்துகொண்டு தடுப்பூசி போடுகிறீர்களோ அந்த தடுப்பூசியில் இருப்பது அதே நோய் கிருமி தான்… நோயிற்க்கான மருந்து அல்ல…. மண்டை குலம்புகிறதா..? தொடர்ந்து படியுங்கள் நீண்ட கட்டுரை இது மிக முக்கிய செய்திகளை உள்ளடக்கியது.

போலியோ சொட்டு மருந்து :
-----------------++-+-+------------------
போலியோ சொட்டு மருந்தால்தான் போலியோ உள்பட பல நோய்கள் ஏற்படுகின்றன என்றால் நம்ப முடிகிறதா..? இந்த உண்மையை சொல்பவர் யாரோ, எவரோ அல்ல. போலியோ சொட்டு மருந்தை கண்டுபிடித்தவரே தான். ”1961ம் ஆண்டுக்குப் பின், அமெரிக்காவில் ஏற்பட்ட அனைத்து போலியோவுக்கும் காரணம் போலியோ சொட்டு மருந்துதான்!” என்று அமெரிக்க செனட் கமிட்டியில் ஒப்புக் கொண்டிருக்கிறார் ஜோனல் சால்க். இவர்தான் போலியோ சொட்டு மருந்தை கண்டுபிடித்தவர்.

 ”போலியோவிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கொடுக்கப்பட்ட தீவிர தடுப்பு மருந்து முயற்சிக்குப் பின்னரும், இம்மருந்தால் பலன் ஏதும் ஏற்படவில்லை என்பது அரசு ஆவணங்களை உற்று நோக்கும்போது தெரிகிறது…” இப்படி சொன்னவரும் போலியோ தடுப்பு மருந்தை உருவாக்கியவர்தான். அவர், சாபின்.

அம்மை நோய்க்கான மருந்தை 1796ல் எட்வர்ட் ஜென்னர் கண்டுபிடித்தார். தன்னுடைய மகனுக்கு முதன்முதலில் இந்த மருந்தை கொடுத்து தன் கண்டுபிடிப்பை நிரூபித்தார். அனைத்து மருத்துவர்களாலும் இந்த மருந்து ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்பு அந்த வேதனையான சம்பவம் நிகழ்ந்தது. ஆமாம், சிலவருடங்களில் அம்மை தடுப்பு மருந்து முதன்முதலில் யாருக்கு போடப்பட்டதோ, அந்த ஜென்னருடைய மகனும், இன்னொருவரும் மருந்தின் வீரியத்தால் மரணமடைந்தனர். இதனால் எட்வர்ட் ஜென்னர் தன்னுடைய 2வது மகனுக்கு அம்மைத் தடுப்பூசியை போடவில்லை. ஆனால், அதற்குள் உலகம் முழுவதும் அம்மைத் தடுப்பூசி புழக்கத்துக்கு வந்துவிட்டது…

மேலே சொன்ன சம்பவங்கள் முதலாளித்துவத்தின்(இலுமினாட்டிகளின்) கோர பசிக்கு மனிதர்கள் தடுப்பூசிகள் என்ற பெயரில் இரையாகும் கொடூரத்தின் சில மாதிரிகள்தான். இப்படி உலகையே குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளையே சுடுகாடாக மாற்றும் போக்கு இலுமினேட்டுகளினால் எப்போது பிறந்ததோ அப்போது முதலே நடைமுறைக்கு வந்துவிட்டது. முதலாளித்துவத்தின் அடுத்தகட்டமான ஏகாதிபத்தியத்தில் இந்தப் போக்கு உச்சநிலையை எட்டியிருக்கிறது.
தடுப்பூசிகளின் விபரீதம் குறித்து பார்ப்போம்.

கி.பி.1796ல் எட்வர்ட் ஜென்னர் அம்மை தடுப்பு மருந்தை கண்டுபிடித்து அதற்கு Vaccination என்று பெயர் சூட்டினார். பசுவைக் குறிக்கும் லத்தீன் சொல்லான Vacceinus-லிருந்து உருவான சொல் இது. இந்த மருந்து எப்படி தயாரிக்கப்படுகிறது என்பதை நாம் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

மனிதர்களுக்கு ஏற்படும் அம்மைக் கொப்புளங்களிலிருந்து வரும் சீழை எடுத்து பாதுகாத்து, பசுக்களுக்கு செயற்கையான காயங்களை ஏற்படுத்தி அந்த புண்களுக்குள் செலுத்துவார்கள். இதனால் இப்புண்கள் வழியே அதிகமான சீழ் வெளியேறத் தொடங்கும். இந்த சீழை எடுத்து அதோடு சில இருப்பு ரசாயனங்களைக் கலந்து அம்மை தடுப்பு மருந்தை தயாரிக்கிறார்கள்.
போலியோ சொட்டு மருந்து தயாரிப்பும் கிட்டத்தட்ட இதுமாதிரிதான்.

 போலியோவை ஏற்படுத்துவதாக நம்பப்படும் கிருமிகளை குரங்குகளின் சிறுநீரகத்தில் ஊசி வழியே செலுத்துகிறார்கள். சிறுநீரக சூழலிலேயே இந்தக் கிருமிகள் வளர்த்தெடுக்கப்பட்டு பின்னர் போலியோ சொட்டு மருந்தாக தயாரிக்கப்படுகிறது.

இப்படி மருந்து தயாரிக்கப் பயன்படும் குரங்குகள், உரிய சோதனைக்கு பிறகுதான் தேர்வு செய்யப்படுகின்றன. என்றாலும், பரிசோதனைகளின் மூலமே வரப்போகிற அல்லது வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் நோய்கள் அனைத்தையும் கண்டுபிடித்துவிட முடியாது. இப்படி 1950களில் பரிசோதிக்கப்பட்ட குரங்குகளில் சிமியன் வைரஸ் 40 (SV40) என்ற கிருமி பாதித்திருந்த விஷயம், மருந்துகள் தயாரிக்கப்பட்ட பிறகுதான் தெரிய வந்தது.

இதனால்தான் ‘இந்தியாவில் போலியோ சொட்டு மருந்து கொடுப்பதைத் தடை செய்யவேண்டும்’ என்று தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் டாக்டர் சத்யமாலா வழக்கு தொடர்ந்தார். ஆனால், அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது..!

அதேபோல், 2006ல் மட்டும் போலியோ சொட்டு மருந்து கொடுத்து இந்தியாவில் 1600 பேருக்கு போலியோ பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், 27,000 பேர் பாதிக்கப்பட சாத்தியம் இருப்பதாகவும் ஜூலை 11, 2008ம் ஆண்டு தேதியிட்ட ‘தி இந்து’ நாளிதழில் கட்டுரை எழுதினார் இந்திய மருத்துவக் கழகத்தின் தடுப்பு மருந்துப் பிரிவின் தலைவரான டாக்டர் ஜேக்கப் புலியேல் (Politics of Polio, July 11/2008).

இந்தக் கட்டுரையின் விவரத்தையும் உண்மையையும் ஆளும் வர்க்கங்கள் கண்டுகொள்ளவேயில்லை… 1853ம் ஆண்டு இங்கிலாந்தில் அம்மை தடுப்பு ஊசியை குத்தும் சட்டம் கட்டாயமாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து உலகின் பல பகுதிகளுக்கும் தடுப்பு மருந்துகள் பரவின. கட்டாயச் சட்டங்களும் அமலுக்கு வந்தன. ஆனால், அம்மை நோய்த் தாக்கத்தில் இம்மருந்துகள் இந்தவிதமான மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. பதிலாக பல புதிய எதிர் விளைவுகளே ஏற்பட்டன. இதனால் 1889ம் ஆண்டு இங்கிலாந்தில் ராயல் கமிஷன் ஏற்படுத்தப்பட்டது. 7 ஆண்டுகள் விசாரணைக்கு பிறகு இக்கமிஷன் வெளியிட்ட அறிக்கையை தொடர்ந்து இங்கிலாந்தில் கட்டாயத் தடுப்பூசி சட்டம் நீக்கப்பட்டது.

1870 – 71களில் அம்மைநோய் ஜெர்மனியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சுமார் 10 லட்சம் பேருக்கு அம்மை நோய் தோன்றியது. இவர்களில் ஒரு லட்சத்து இருபதாயிரம் பேர் மரணமடைந்தனர். இறந்தவர்களில் நூற்றுக்கு 96 பேர் அம்மை நோய் தடுப்பூசியை குத்திக் கொண்டவர்கள். அதுமட்டுமல்ல, அம்மைத் தடுப்பூசி குத்திக் கொண்ட சிறுமிகள், வளர்ந்து தாயானதும் அவர்களுக்கு தாய்ப்பால் சுரக்கவில்லை என்பதும் கண்டறியப்பட்டது. இந்த உண்மை வெளிப்பட்டதும் 1880ம் ஆண்டு உலக தடுப்பூசி எதிர்ப்புச் சங்கம் (International Anti-Vaccination League) உருவாக்கப்பட்டது. அந்த ஆண்டின் இறுதியில் பாரீசில் நடைபெற்ற முதல் மாநாட்டில் பல நாடுகளில் இருந்தும் பிரதிநிதிகள் கலந்துகொண்டார்கள். தடுப்பூசிகளை எதிர்க்கும், முறைப்படுத்தக் கோரும் 10 தீர்மானங்கள் அம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. ஆனால்… அது நடைமுறைக்கு வர பன்னாட்டு நிறுவனங்கள் அனுமதிக்கவில்லை…
இந்த புள்ளிவிபரத்தை பாருங்கள். 1980களில் அமெரிக்காவில் குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 10. அதுவே 2008ல் 36 ஆக உயர்ந்தது. அத்துடன் 1983ல் மூளை வளர்ச்சி குறைவுள்ள அமெரிக்க குழந்தைகள் பத்தாயிரத்தில் ஒருவர்தான். ஆனால், 2008ல் அமெரிக்க குழந்தைகளின் மூளை வளர்ச்சி குறைவு விகிதம் நூற்றைம்பதில் ஒருவராக மாறியிருந்தது. அதாவது 3000 மடங்கு அதிகரித்திருந்தது. இதற்கு காரணம் தடுப்பூசிகள்தான்.

மூன்றாம் உலக நாடுகள் அமெரிக்கா செல்லும் பாதையைத்தான் பின்பற்றுகின்றன என்பதால் ஆசிய, ஆப்ரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஏற்பட்டுள்ள புதிய புதிய நோய் பாதிப்புக்குகளுக்கு காரணம் தடுப்பூசிகள்தான் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

மஞ்சள் காமாலைக்காக விளம்பரப்படுத்தப்பட்ட தடுப்பூசியின் கதையைக் கேட்டால் வயிறு எரியும். ஹெர்படைட்டிஸ் ஏ, ஹெர்படைட்டிஸ் பி என மஞ்சள் காமாலையில் இருவகை உண்டு.

இதில் ஹெர்படைட்டிஸ் பி ஆட்கொல்லி நோய். ஆனால், தொற்று நோயல்ல. அதேபோல் பரவலாக வரக் கூடியதும் அல்ல. அபூர்வமாகவே மனிதர்களை தாக்கும் இந்த ஹெர்படைட்டிஸ் பி-க்கான தடுப்பூசி வீரியமிக்கது. இதை ஹெர்படைட்டிஸ் ஏ தாக்கியவர்களுக்கு போடக் கூடாது. உண்மை இப்படியிருக்க, 1990களில் பூதாகரமாக மஞ்சள் காமாலைத் தடுப்பூசி குறித்து (ஹெர்படைட்டிஸ் ஏ) பிரசாரம் செய்யப்பட்டது.

இது ஏதோ ஆட்கொல்லி நோய் போலவும், அந்நோய் வந்தவர்கள் எளிதில் மரணமடைவார்கள் என்பது போலவும் விளம்பரம் செய்யப்பட்டது. இந்த ஏகாதிபத்திய வெறிக்கு இந்தியா போன்ற தெற்காசிய நாடுகளும் பலியாகின. மஞ்சள் காமாலைக்கு மருந்துகள் எதுவும் இல்லாமல் உணவுமுறையை ஒழுங்குபடுத்துவதன் மூலமே குணமாக்கலாம் என்ற பழம்பெரும் உண்மை மறைக்கப்பட்டது.

இதன்விளைவாக 1990களில் அமெரிக்காவில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் மஞ்சள் காமாலை தடுப்பூசி கட்டாயம் போட வேண்டும் என்ற சட்டம் நடைமுறைக்கு வந்தது. ஆனால், 1997ல் நடத்தப்பட்ட அமெரிக்க அரசின் ஆய்வில் மஞ்சள் காமாலை தடுப்பூசியும், அம்மைத் தடுப்பூசி போன்றே 13 விதமான புதிய நோய்களை ஏற்படுத்தும் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. வலிப்பு, ஜன்னி, கண்பார்வை பாதிப்பு, மூளைக் காய்ச்சல் போன்றவை இதில் அடங்கும். உடனே அமெரிக்க அரசு கட்டாய தடுப்பூசி சட்டத்தை அவசரமாக நீக்கியது. இதனால் ஏராளமான தடுப்பூசி மருந்துகளை உற்பத்தி செய்து வைத்திருந்த அமெரிக்க மருந்துக் கம்பெனிகள் அதிர்ந்தன.
இந்த மருந்தை என்ன செய்வது?
அவர்களின் துயர் தீர்க்க முன்வந்தார் பில்கேட்ஸ்….

தனது தொண்டு நிறுவனத்தின் மூலம் ஆந்திர மாநிலத்தில் 4.5 லட்சம் குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை தடுப்பூசிகளை இலவசமாக போட்டார். இந்த தடுப்பூசி அமெரிக்க நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்பட்டு, அமெரிக்க அரசால் 1997ல் தடைசெய்யப்பட்டவை…!!!!

தடுப்பூசிகளை ஆதரிப்பவர்கள் என்ன சொல்கிறார்கள்? ‘முன்பெல்லாம் கொள்ளை நோய்கள் மக்களை கூட்டம் கூட்டமாக தாக்கியதே… தடுப்பூசிகள் வந்ததற்கு பின்னால்தானே கொள்ளை நோய்கள் கட்டுக்குள் வந்தன?’ நம் மனதில் இப்படித்தான் பதிய வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், உண்மை இதுமட்டுமே அல்ல. பல தீவிரமான கொள்ளை நோய்களை தடுப்பூசிகள் தடுத்து நிறுத்தியதை காட்டிலும் தடுப்பூசி என்னும் பெயரில் பன்னாட்டு நிறுவனங்கலின் பெயரில் இல்லுமினாட்டிகள் நடத்தும் வணிகமும், இதனையடுத்து தோன்றியுள்ள புதுப்புது நோய்களும் மிக அதிகம். 2009ம் ஆண்டு சீனாவிலிருந்து உலகம் முழுக்க சார்ஸ் (பறவைக்காய்ச்சல்) பரவுவதாக பிரசாரம் செய்தார்கள். இந்த சளிக்காய்ச்சலை கட்டுப்படுத்தவோ, பரவாமல் தடுக்கவோ எந்த மருந்தும் கண்டுபிடிப்பதற்கு முன்பே அக்காய்ச்சல் படிப்படியாக குறைந்தது. இதேநிலைதான் இந்தியாவில் ஏற்பட்ட சிக்குன்குனியா காய்ச்சலுக்கும் ஏற்பட்டது. பன்றிக்காய்ச்சலையே எடுத்துக் கொள்வோம். ஏதோ கொள்ளை நோய் போல உலகம் முழுவதும் பேசப்பட்ட இந்நோய்க்கான தடுப்பு மருந்து தாமிஃப்ளூ விற்பனைக்கு வரும் முன்பே இந்நோய் குறைந்துவிட்டது. எந்தவொரு நோயானாலும் மக்களின் உடல் நிலை மற்றும் சுற்றுப்புற சமூக காரணிகளை வைத்து தானாகவே ஏற்படும். குறிப்பிட்ட இடைவெளியில் தானாகவே மறையும்.
இந்த அறிவியல் உண்மை மறைக்கப்பட்டு, ஆனால், இதன் சாராம்சத்தை – அதாவது தானாகவே மறையும் தன்மை – மட்டும் எடுத்துக் கொண்டு ஆளும் வர்க்கங்களும், பன்னாட்டு நிறுவனங்களும் ஏதோ தங்களால்தான் – தாங்கள் அறிமுகப்படுத்திய தடுப்பூசியால்தான் – நோய்களை கட்டுப்படுத்த முயன்றது போல் பிரசாரம் செய்கின்றன. சில பழைய பக்கங்களை பார்ப்போம்.

1950களில் போலியோ நோயின் தாக்கம் உலகெங்கும் 40 மில்லியனாக இருந்தது. அப்போது போலியோவிற்கான எந்த தடுப்பு மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. 1952ல் 19 மில்லியனாகவும், 1954ல் 8 மில்லியனாகவும் தன்னால் இது குறைந்த பிறகு 1956ல் போலியோ தடுப்பு மருந்து கண்டறியப்பட்டது. இப்போது என்ன சொல்கிறார்கள்? இந்த தடுப்பு மருந்தால்தான் போலியோ கட்டுக்குள் இருப்பதாக… தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாத டைபாய்டு காய்ச்சல் 1910ல் 500 மில்லியனுக்கு மேல் உலகெங்கும் பாதிப்பு ஏற்படுத்தியது. தடுப்பூசி பயன்படுத்தாத நிலையில் 1920ல் அதுவே 200 மில்லியனாகவும், 1930ல் 100 மில்லியனாகவும் குறைந்துவிட்டது.
.
இப்படி இயற்கையாகக் குறைந்த பல நோய்களைத் தங்கள் வரைபடத்தில் ஏற்றி வருமானமாக மாற்றும் தந்திரத்தைத்தான் தடுப்பூசி தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் செய்கின்றன. இப்போது தடுப்பூசி மருந்துகள் குறித்த ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதற்கு பதிலாக – இந்த மருந்துகளை தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் என்ன சொல்கின்றன என்று பார்ப்போம்.
அதாவது ‘புகைப்பிடிப்பது உடல் நலத்துக்கு கேடு…’ என்று அச்சிடுகிறார்கள் இல்லையா?

அதேபோல் தடுப்பூசி மருந்துடனும் சில எச்சரிக்கைகளை பன்னாட்டு நிறுவனங்கள் அச்சிடுகின்றன. அவை என்ன தெரியுமா?

1. அதிகப்படியான காய்ச்சல் (105 டிகிரி அல்லது அதற்கு மேல்)
2. மந்தமாக இருத்தல்; நீடித்த அசதி
3. மூளை வளர்ச்சி குறைபாடு; மூளை பாதிப்பு
4. எப்போதாவது வலிப்பு; மயக்கம்
5. கண் நரம்புக் கோளாறுகள்; நரம்பு தொடர்பான நிரந்தக் கோளாறுகள் …

 ஆகியவை தடுப்பூசிகள் போட்டுக் கொண்டால் ஏற்படலாம் என எச்சரிப்பது அந்த தடுப்பூசி தயாரித்த நிறுவனங்கள்தான்.

ஆனால், எந்த மருத்துவரும் இதைக் குறித்து நோயாளிகளிடம் சொல்வதில்லை…? ஏன் ??
அதுமட்டுமல்ல, உச்சபட்ச விளைவாக SIDS (Sudden Infant Death Syndrom) ஏற்படுத்துவதாக தடுப்பூசியை தயாரிக்கும் நிறுவனங்கள் சொல்கின்றன.
இதன் அர்த்தம் என்ன தெரியுமா?
குழந்தை திடீரென இறந்து போகும்…
ஆனால், இந்த உண்மையை – அதாவது தடுப்பூசியை தயாரித்த நிறுவனம் சொல்லும் எச்சரிக்கையை – எந்த மருத்துவரும் நோயாளிகளிடம் சொல்வதில்லை. பதிலாக சிரஞ்சியில் ஏற்பட்ட மருந்தையே கண்ணுக்கு காட்டுகிறார்கள்

உங்களுக்கு தெரிந்த பாஷையில் சுருக்கமாக சொல்லப்போனால்
நோய்களும் அதற்கு காரணமான விஷ வைரஸ் கிருமிகளும் அவர்களுடையது .— அதை குணமாக்குவதாக குரப்படும் மருந்தும் அவர்களுடையது
இது மட்டும் அல்ல பெயர் போன medical collage University இதுவும் இவர்களுடையது ../இதில் வரும் பாடத்திட்டம்
இது கூட இலுமினேட்டி களுடையது.
பார்த்திர்கலா சகோதரர்களே இவர்கள் எந்த அளவு மனித குலத்தை முட்டாள்கல் ஆக்கி வைத்துள்ளார்கள் என்று……
“உண்மை யை உரக்க சொல்வோம்”

ஒரு பெண்ணின் உடலில் நபிகள் நாயகம் அவர்களின் ஆத்மா இறங்குவது உண்மையா?

ஒரு பெண்ணின் உடலில் நபிகள் நாயகம் அவர்களின் ஆத்மா இறங்குவது உண்மையா.

அஸ்ஸலாமு அலைக்கும்
மதிப்புக்குரிய இஸ்லாமிய சகோதரர்களே.

இலங்கையில், அக்கரைப்பற்று Base Hospital அருகில் வசிக்கும் நோனா உம்மா என்று அழைக்கப்படும் ஒரு பெண் தனக்குள் முஹம்மது நபிகள் (ஸல் ) அவர்களது ஆத்மா இறங்குவதாகவும் கூறி அப்பெண் தன பக்தர்களுக்கு ஆசி வழங்கியும் வருகிறார்.

தன் பக்தர்கள் சுவனதிற்கு பரிந்துறை செய்யப்பட்டவர்கள் என்றும் கூறியுள்ளார்.

இதற்குமுன் தன்மீது அவ்லியாக்கள் மற்றும் மலாயிகாமர்கள் இறங்குவதாகள சொல்லி குறி மற்றும் வைத்தியம், சூனிய முறிப்பு, வீடு காவல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார்.
தன் பக்தர்கள் அவர்களது முன்பிறவியில் அவ்லியாக்கலாக இருந்ததாகவும் கூறியுள்ளார்.
இப்போது ஒருபடி முன்னேறி தான் முஹம்மது நபிகள் (ஸல்) என்று கூறி ஆத்மா இறங்கும் வேளைஹளில் தன்னோடு ஆண்கள் நேரடியக கைகுலிக்கி கொள்ளலாம், அனால் பெண்கள் தங்கள் ஆடைஹளால் தங்கள் கைஹளில் திரை இட்டு தான்  கைஹுளுக்க  வேண்டுமாம்.
தொளுஹை அவசியம் இல்லை திக்ர் மாத்திரம் போதும் என்றும் மற்றும் பக்தர்களின் தேவைக்கு ஏட்ப இறைவனின் சட்டங்களில் சலுஹைகளும்  வழங்கி வருகிறார்.
இது மட்டுமா!
தன்  மீது அல்லாஹ் வின் ஓளி நேரடியாக விழுந்துகொண்டிருப்பதாகவும் கூறி வருகிறார் (ஒருவேளை அடுத்த கட்டத்துக்கு அஸ்திவாரம் இடுகிரரோ).
அதட்கிடைஇல் அவருக்கு சுமார் 30 குடும்பங்கள் பக்தர்கலாக அவரை ஈமான் கொண்டுள்ளனர் (அனைவரும் சுவனம் செல்ல குறுக்கு வழி தேடும் தனவந்தர்கள் தான்).

அல்லாஹ் வை பயப்படுகின்ற இஸ்லாமிய சஹோதரர் களே.
என்ன ஒரு கேவலம்
எமக்கு மீண்டும் ஒரு "பைல்வான்" தேவையா?....
இது போகிற போக்கை பார்த்தால் "பைல்வானையும்" மிஞ்சி "பிர்அவ்ன்" போன்று ஆஹிவிடுவளோ என்று பயப்படுகிறேன்.

வாருங்கள் இந்த சிர்க்கை ஒழிப்போம்
இஸ்லாத்தின் தூய்மையை அளிக்க வந்திருக்கும் இந்த பெண் தஜ்ஜாலிடம் இருந்து எம் உயிரிலும் மேலானே ஓரிறை கொள்கையை பாதுகாப்போம்.

கூகுள்  மெப் :  7.228547, 81.853552
இது அந்த பெண்ணின் வீடும் தர்காவும் இருக்கும் இடம்.

தயவு கூர்ந்து இந்த செய்தியை தீர விசாரித்து அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளவும்.
(இந்த செய்திகள் அவருடைய பக்தர்களிடம் துருவி விசாரித்ததில் தெரிய வந்தது)

உங்களுக்கு தெரிந்த அனைத்து வாட்ஸ் அப் குழுக்களுக்கும் பஹிர்ந்து கொள்ளவும்.
பேஸ்புக் மற்று அனைத்து சோசியல் மீடியகளிலும் பகிந்து இந்த சிர்க் கிற்கு எதிராக போரிடுங்கள்.

இப்படிக்கு ஓரிறை விசுவாசி.

பாம்பு வளர்ப்பில் மாதம் இரண்டு இலட்சம் சம்பாதிக்கலாம்...!




பாம்பு வளர்ப்பில் மாதம் இரண்டு இலட்சம் சம்பாதிக்கலாம்...!

ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்புபோல் பாம்பு வளர்ப்பும் ஒரு மிகப்பெரிய தொழிலாக தற்போது உருவெடுத்து வருகிறது. குறைந்த செலவில் அதிக லாபம் குவிக்கும் ஒரு தொழிலாகவும் கருநாக வளர்ப்பு வளர்ச்சியடைந்துவருகிறது.
‘சிநேக் சிறீலங்கா பார்ம்’ என்ற பெயரில் இலங்கையில் கருநாக வளர்ப்பு தொழிலை வெற்றிகரமாக நடத்திவரும் குருணாகலையை சேர்ந்த ஹெட்டியாராய்ச்சி என்பவர் இதுபற்றி எழுதியுள்ள கட்டுரை:
நான் இந்த பாம்பு பண்ணையை 2009-ம் ஆண்டு 5 ஜோடி குட்டிகளுடன் தொடங்கினேன். ஆரம்பத்தில் நிறைய தடுமாற்றங்களை சந்தித்தேன். பிறகு இது தொடர்பாக நிறைய பண்ணையாளர்களுடன் கலந்துரையாடிய பின் இதை எப்படி வெற்றிகரமாகச் செய்வது என்ற தெளிவைப் பெற்றேன்.அதை பின்பற்றியதிலிருந்து மாதம் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை வருமானமாக பெற முடிகிறது. இன்று தமிழகம் முழுவதிலும் பலர் இதுபற்றிய விவரங்களை பெற்று பாம்பு பண்ணை தொடங்க ஆலோசனை கேட்ட வண்ணம் உள்ளனர்.பண்ணைவைக்கும் ஆர்வம் உள்ளவர்களுக்கு எனது பண்ணையிலிருந்தேகுட்டிகளைதந்து உதவுகிறேன்.
இதற்கு ஆகும் செலவு
5 ஜோடி பாம்பு குட்டிகள் ரூ.10,000,
25 வெள்ளை எலிகள் (தீவனம்) ரூ.2,000,
கொட்டாய் செலவு ரூ.10,000,
பாம்பு முட்டையை பொரிக்க உதவும் இன்குபேட்டர் ரூ.60,000
ஒரு லட்சம் ரூபாய்க்கும் குறைவான முதலீட்டில் ஆறே மாதங்களில் 5 லட்ச ரூபாய்வரை வருமானம் பெற வாய்ப்பு உள்ளது.

குட்டிகளைத் தேர்வு செய்யும் முறை:
குட்டிகளுக்கு பார்வைத் திறனும்,கேட்கும் திறனும் உள்ளதா, நல்ல கடிக்கும் திறன் உள்ளதா என கவனித்து வாங்க வேண்டும். 3 மாதத்துக்கு மேல் உள்ள குட்டிகளை தேர்வு செய்வதே புத்திசாலித்தனம். ஏனென்றால் அப்போதுதான் அவை அதிகமாக இறக்காது. குட்டிகளை வெயில் படாத இடமாக பார்த்து வளர்க்க வேண்டும்.5 ஜோடி பாம்புகள் வளர்ந்த பின் ஒவ்வொரு ஜோடியில் இருந்தும் மாதத்துக்கு 200 மில்லி விஷம் கிடைக்கும்.
 1 லிட்டர் பாம்பு விஷத்தின் இன்றைய சர்வதேச விலை ரூ.1 லட்சம். ஒவ்வொரு பாம்பும் தன் வாழ்நாளில் 20 லிட்டர் விஷத்தை உற்பத்தி செய்யும். இந்த ஐந்து ஜோடி பாம்புகளே 200 லிட்டர் விஷத்தை உற்பத்தி செய்யும். இதன் மூலம் 2 கோடி ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.மேலும் ஒவ்வொரு ஜோடி பாம்பும் மூன்று மாதத்துக்கு ஒருமுறை 30 முட்டைகள் வரை இடும். அவற்றைஇன்குபேட்டரில் வைத்து பராமரித்தால் வருடத்துக்கு4 முறை என்று ஆண்டொன்றுக்கு 600 பாம்பு குட்டிகள் கிடைக்கும். அவற்றை விற்பனை செய்வதன் மூலம் ரூ.60 லட்சம் சம்பாதிக்கலாம்.கேட்கவே தலை சுற்றுகிறதா? இது தவிர பாம்பின் தோல், மாமிசம் ஆகியவற்றையும் நல்ல விலைக்கு விற்கலாம்.
ஆகவே குறைந்த முதலீட்டில் நிறைந்த லாபத்தை பெற எங்களை அணுகுங்கள். நிறைய பணத்தை அள்ளுங்கள்.

தொடர்புகொள்ள வேண்டிய முகவரி:
 சfப்ரான் MH,
A12/219,விவேகானந்தர் தெரு,
துபாய் குருக்கு சந்து,
துபாய் மெயின்ரோடு,
துபாய்.

(ஸ்ஸப்ப்பாப்ப்ப்பபா... உங்களை நம்ப வைக்க எவ்வளவெல்லாம் எழுத வேண்டி இருக்கு. "சதுரங்கவேட்டை"படத்தை பாத்துட்டுமா இன்னும் இந்த கதையை சீரியஸா படிச்சிட்டு இருக்கீங்க....இப்படி ஒரு புருடா விட்டாலும் பணத்தை கொண்டு வந்து கொட்ட ஒரு பேராசை பிடித்த கூட்டமே இருக்கு)

பின்குறிப்பு:
ஒட்டக முட்டையை பொரிப்பது பற்றி அடுத்த கட்டுரை வெளியாகும். அதையும் தெரிந்துகொண்டு லட்சக்கணக்கில் பணத்தை அள்ளுங்கள்.

2015 A/L மாணவர்களுக்கு நிதியுதவி!


உங்கள் பெற்றோர் ETF உறுப்பினர் எனில், நீங்கள் 2015 A/L பரீட்சைக்கு தோற்றிய மாணவர் எனில் ETF மூலம் வழங்கப்படும் 12000/= ரூபா நிதியுதவியை பெற நீங்கள் விண்ணப்பிக்கலாம்.
நாடு முழுவதும் 5000 மாணவர்களுக்கு இந்த நிதியுதவி வழங்கப்படுகிறது.
மேலதிக விபரங்களுக்கு படத்தில் உள்ள பிரதேச காரியாலயங்களை அல்லது பின்வரும் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.
011 2369313
011 2368163

www.etfb .lk

Wednesday, February 24, 2016

இலங்கை கல்வி நிருவாக சேவையின் போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் திகதி 2016.03.28 வரை நீடிப்பு



மேற்படி பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் வயதெல்லை 3 வயதால் அதிகரிக்கப்பட்டு உள்ளதோடு ,பரீட்சைக்குத் தோற்றும் எண்ணிக்கை புதிய பிரமாணக் குறிப்பின் படியே கணக்கில் கொள்ளப்படும் எனவும் .இந்த புதிய தீர்மானத்தால் விண்ணப்பிக்கும் 2016.03.28 வரை நீடிக்கப்பட்டு உள்ளதாக சற்று நேரத்துக்கு முன்னர் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தொலைபேசி மூலம் தகவல் தந்தார் .

இந்த தகவல் வர்த்தமானி மூலம் உறுதியானால் இந்தப் போட்டிப் பரீட்சை மே மாதத்துக்கு பின்னரே நடைபெறும்

3 ஆம் உலகப்போர்

3 ஆம் உலகப்போர் !!!!?
சவுதி அரேபியாவை தலைமையாகக் கொண்டு 20+15 முஸ்லிம் நாடுகளின் இராணுவம் தயார் நிலையில் சவுதியில் நிலை கொண்டுள்ளது.

இராணுவ வீரர்கள் : மூன்று இலட்சத்து ஐம்பது ஆயிரம்

பீரங்கிகள் : இருபது ஆயிரம்

போர் விமானங்கள் : இரண்டாயிரத்து ஐநூறு

ஹெலிஹாப்டர்கள் : நானூற்று ஐம்பது

அணி 1

சவுதி அரேபியா, பாக்கிஸ்தான், துர்கி, எகிப்து, துபாய், ஜோர்டான், பஹ்ரைன், செனகல், சுடான், குவைத், மால்தீவ்ஸ், மொறாக்கோ, சாட், துனுசியா, ஓமான், கத்தார், மலேசியா, மொரிசிஸ், மொரித்தானிய, திஜிபொத்தி, காமரோ.

மேலும் 15 முஸ்லிம் நாடுகள் இதில் பங்கேற்க உள்ளது.
இந்த நாடுகளுக்கு தலைமையாகவும் கட்டளை பிறப்பிபவர்களாகவும் சவுதி அரேபியா இருக்கும்.

அணி 2

சிரியா, இரான், ரஸ்யா.

இந்த அணியில் சீனா மற்றும் வட கொரியா பங்கேற்க வாய்ப்புகள் உள்ளது

2015 முதல் தொடர்ந்து ரஷ்யா மற்றும் ஈரான் தனது ஏவுகணைகளையும், அதி நவீன போர்கருவிகளையும் சிரியாவிற்கு அனுப்பிக் கொண்டே இருக்கிறது.

இந்த இரு அணிகளையும் உருவாக்கி அதற்கு அங்கீகாரம் கொடுத்து பின் இருந்து இயக்குபவர்கள் ரூத்ஸ்சைல்ட், ராக்கபெல்லர், இரண்டாம் எலிசபெத்.

தற்போது ராக்கபெல்லர் கச்சா எண்ணெய் சம்மந்தமான அனைத்து பங்குகளையும், பங்குச்சந்தையில் குறைந்த விலையில் வாங்குகிறார் ஆகவே கச்சா எண்ணெய் மிகவும் குறைந்த விலையில் விற்கப்படுகிறது. இரு அணிகளுக்கும் மத்தில் போர் ஆரம்பித்த பிறகு கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும் இதனால் அதிக விலையில் கச்சா எண்ணெய் விற்கப்படும் ராக்கபெல்லர் மீண்டும் அதிக விலையில் பங்குச்சந்தையில் பங்குகளை விற்பார்.

கச்சா எண்ணெய் தட்டுப்பாடு இந்தியாவில் ஏற்பட்டால், போக்கு வரத்து பாதிக்கும், லாரி ஓட்டுனர்கள் காலவரையற்ற போராட்டங்களை தொடுப்பார்கள். உணவுப் பரிமாற்றங்கள் தடைபட்டு உணவுப் பஞ்சம் ஏற்பட்டு அதிகமான மக்கள் வறுமையில் இறக்கலாம். இந்தியாவில் இதனால் உள் நாட்டு போர்கள் வெடித்து இராணுவ ஆட்சி அமலில் வரலாம். அதற்காகத்தான் மோடி போன்ற சர்வாதிகாரிகள் இந்த நேரத்தில் ஆட்சியில் அதிகப்படியான மந்திரிகளுடன் இருக்கிறார்கள்.

3 ஆம் உலகப்போர் முடிந்த பிறகு குர்திஸ்தான் என்ற ஒரு புதிய நாடு உருவாகியிருக்கும். சில நாடுகள் காணாமல் போய் ஒரு நாட்டுடன் இணைந்திருக்கும். ஆனேகமான முஸ்லிம்கள் இறந்திருப்பார்கள். பெண்களின் எண்ணிக்கை அதிகப்பட்டிருக்கும்.

அதைத் தொடந்த 4 ஆம் உலகப்போரில் மஞ்சள் நிறத்து சாத்தானை வணங்குபவர்கள் 80 நாடுகளுடன் மீண்டும் முஸ்லிம்களை நோக்கி வருவார்கள். அந்த நேரங்களில் ஈஸா நபி வரலாம்… முஸ்லிம்கள் வெற்றி பெறுவார்கள்.

எலி தப்பித்து விட்டது. அப்பாடா...

சின்ன கதை தான் படிங்க.. சுவாரஸ்யமா இருக்கும்...

ஒரு வீட்டில் டீட்டீ என்ற எலி தனது இரவு நேர இரைதேடப் புறப்பட்டுக்கொண்டிருந்தது.

வலையை விட்டு தலையை உயர்த்திப்பார்த்தது.

வீட்டின் எஜமானனும் எஜமானியும் ஒரு பார்சலைப் பிரித்துக் கொண்டிருந்தார்கள்.

ஏதோ நாம் சாப்பிடக்கூடிய பொருள்தான் உள்ளே இருக்கும் என்று ஆவலோடு பார்த்தது டீட்டீ.

அவர்கள் வெளியே எடுத்தது ஒரு எலிப்பொறி.

அதைப்பார்த்ததும் டீட்டீக்கு மூச்சே நின்று விடும் போல இருந்தது.

உடனே ஒரே ஓட்டமாக வீட்டில் இருந்த கோழியிடம் போய் சொன்னது "பண்ணையார் ஒரு எலிப்பொறி வாங்கி வந்துள்ளார். எனக்கு பயமாக இருக்கிறது."
கோழி விட்டேற்றியாகச் சொன்னது" உன்னைப் பொறுத்தவரை கவலைப்பட வேண்டிய விஷயம்தான்.நல்ல வேளையாய் இந்த எலிப்பொறியால் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை."

உடனே அது பக்கத்தில் இருந்த வான்கோழியிடம் அதே விஷயத்தைப் போய்ச் சொல்லியது. வான்கோழியும் அதேபதிலைச் சொல்லியதோடு "நான் எலிப்பொறியயெல்லாம் பார்த்து பயப்பட மாட்டேன்." என்றது.

மனம் நொந்த டீட்டீ அடுத்து பக்கத்தில் இருந்த ஆட்டிடம் போய் அதே விஷயத்தைச் சொல்லியது. ஆடும் அதேபதிலைச் சொல்லியது. அத்தோடு நின்றிருந்தாலும் பரவாயில்லை "எலிப்பொறியை பார்த்து என்னையும் பயப்படச் சொல்கிறாயா?" என்று நக்கலும் அடித்தது.

அன்று இரவு எலிப்பொறியில் ஒரு பொரித்த மீன் துண்டை வைத்து விட்டு பண்ணையாரும் அவர் மனைவியும் தூங்கப் போயினர்.

ஒரு அரை மணி நேரத்தில் " டமால் " என்றொரு சத்தம்.

எலி மாட்டிக்கொண்டுவிட்டது என்று பண்ணையார் மனைவி ஓடிவந்து எலிப்பொறியைத் கையில் தூக்கினாள்.

எலிக்கு பதிலாக பாதி மாட்டியிருந்த பாம்பு ஒன்று எஜமானியம்மாளைக் கடித்து விட்டது.

எஜமானியம்மாளை உடனே ஆஸ்பத்திரிக்கு எடுத்துக்கொண்டு ஓடினார்கள். விஷத்தை முறிக்க இன்ஜெக்சன் போட்டபின்னும் பண்ணையார் மனைவிக்கு ஜுரம் இறங்கவேயில்லை.

அருகில் இருந்த ஒரு மூதாட்டி "பாம்புக் கடிக்குப் பின்னால் வரும் காய்ச்சலுக்கு "சிக்கன் சூப் வைத்துக்கொடுத்தால் நல்லது" என்று யோசனை சொன்னாள்.

கோழிக்கு வந்தது வினை. கோழி அடித்து சூப் வைக்கப்பட்டது. கோழி உயிரை விட்டது.

அப்போதும் பண்ணையார் மனைவியின் ஜுரம் தணியவில்லை.

உறவினர்கள் சிலர் வந்தார்கள்.அவர்களுக்குச் சமைத்துப்போட வான்கோழியை அடித்தார்கள். வான்கோழியும் உயிரை விட்டது.

சில நாட்களில் பான்னையாரம்மாவின் உடல் நலம் தேறியது.

பண்ணையார் மனைவி பிழைத்ததைக் கொண்டாட ஊருக்கே விருந்து வைத்தார்.

இந்த முறை ஆட்டின் முறை.

விருந்தாக ஆடும் உயிரை விட்டது.
நடந்த அத்தனை நிகழ்வுகளையும் டீட்டீ வருத்ததோடு கவனித்துக் கொண்டிருந்தது.

பண்ணையார் மனைவியின் பாம்புக்கடிக்குக் காரணமான எலிப் பொறியைத் தூக்கிப் பரணில் போட்டு விட்டார்.

எலி தப்பித்து விட்டது. அப்பாடா...
__________________________
நீதி :- அருகில் இருப்பவர்கள் தனக்கொரு பிரச்சினை என்று வந்தால் "என்ன" என்றாவது கேளுங்கள்.

ஏனென்றால் யாருக்கு என்ன பிரச்சினை எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது.

அடுத்தது அந்தப் பிரச்சினை நமக்கும் வரலாம்.

அடுத்த முறை நம்முடையதாகவும் இருக்கலாம்......

🎉இது சாப்பாட்டு தத்துவம்🎉



🎊"தோல்வி என்பது பெருங்காயம் போல... தனியாகச் சாப்பிட்டால் கசக்கும்; வெற்றி என்னும் சாம்பாரில் கரைந்து விட்டால் மணக்கும !🎊

🎊 ஒரு குக்கரைப் போல இருங்கள்.... பிரஷர் அதிகமாகும் போது விசிலடித்துக் கொண்டாடுங்கள்!🎊

🎊 லட்சியமும் முட்டையும் ஒன்று .... தவற விட்டால் உடைந்து விடும்!!!🎊

🎊சோம்பேறித்தனம் என்பது மிளகாய்க் காம்பு போல.... கிள்ளி எறிந்து விட வேண்டும்!!!🎊

🎊வாழ்க்கை சிக்கலான இடியாப்பம்தான். அதில் அன்பு என்னும் தேங்காய்ப்பாலைக் கலந்தால் சுவைக்கும்!🎊

🎊பொய், நூடுல்ஸ் போல் தற்காலிகமானது: உண்மை இட்லி போல நிரந்தரமானது!!🎊

🎊 கோபத்தை உப்பைப் போல பயன்டுத்துங்கள் அதிகமானால் வாழ்க்கை சுவைக்காது!!!🎊

‪🎊தலைக்கனம்‬ என்பது வெந்நீர் போன்றது...அதை அடுத்தவர் மீது கொட்டாதீர்கள் நம் மீதே சிந்திவிடும்.🎊

‪🎊தாமதமான‬ வெற்றி என்பது, பல் இழந்த பிறகு கிடைக்கும் நல்லி எலும்பு போல...... அனுபவிக்க
முடியாது!!🎊

‪🎊தன்னம்பிக்கைச்‬  சூத்திரங்கள் என்பவை சமையல் ரெசிப்பி போல ...சமைப்பது உங்கள் கையில்தான்!🎊

🎊வெற்றி என்பது இட்லியை போல வேகுவது
தெரியாது...
வெந்தபின் தான்
தெரியும்...🎊

🎊 வெற்றி என்ற இட்லியை தனியே உண்ண முடியாது...
நட்பு என்ற சட்னி
வேண்டும்.. 🎊

😊😊😊

ஒரு அத்தியாயம் முடிகிறது



என்னை விட மாவனல்லை மண்ணுக்கு மிகவும் அறிமுகமான ஒரு மாமனிதரை நாம் இழந்துவிட்டோம்.மாவனல்லையில் பிறந்து வளா்ந்து வாழ்ந்து குறிகிய காலத்தில் என்னற்ற பணிகளில் ஈடுபட்டு சமுக நலனுக்காக உழைத்த ஒரு சமுக தலைவனை பிாிந்துவிட்ட சோகத்தில் நான் எழுதும் வாிகள் இவை . கண்கள் குளமான நிலையில் பிரவாகிக்கும் கண்ணீருடன் எதை எழுதப்போகிறேன் என்று அறியாமல் எழுதுகின்றேன்.

இன்று இரவு Yoosuf Ali ஆசிாியாின் மரண செய்தி கேட்ட போது என் சொந்த தந்தையை இழந்துவிட்ட உணா்வு என்னுல் ஏற்பட்டது. அவருடன் அன்பாக பழகும் சந்தா்ப்பத்தை அல்லாஹ் எனக்கு தந்திருந்தான். அல்ஹம்துலில்லாஹ்.

தன்னை ஒரு சாதாரன ஆசிாியராக மட்டும் சமுகத்துக்கு அறிமுகப்படுத்தவில்லை. அவா் சமுக விவகாரங்களிளும் இஸ்லாமிய பணியிலும் தன்னையும் தனது குடும்பத்தையும் முழுமையாக ஈடுபடுத்தினாா்கள். முஸ்லீம்களுடன் மட்டுமின்றி பெருன்பான்மை சமுகத்திடம் சகவாழ்வையும் புரிந்துணா்வையும் எற்படுத்துவதில் முன்னின்று உழைத்தவா். பள்ளிப்பாிபாளன சபையில் மிக நீண்டகாலம் உழைத்தவா் அதுமட்டுமல்ல எத்தனையோ சமுக அமைப்பகளில்  இணைந்து பாடுபட்ட ஒரு சமுக தொண்டரை இன்று இழந்திருக்கிறோம்.

முக்கிய விடயம் யாதெனில் எல்லோர் மனதையும் வென்று தனது பணியில் வெற்றிகண்டவா் அவா்.
அவரது நிதானம் ,அமைதியான போக்கு, அவசரப்படாத தன்மை, யாருடனும் முரண்பட்டுபோகாத தன்மை,மென்மை,அனைவரையும் அரவனைது போகும் தன்மை இவை அனைத்தும் நான் அவாிடம் படித்த பாடங்கள்.
அன்னாாின் வாழ்க்கை நமக்கு பல பாடங்களை கற்றுத்தறுகிறது.அவைகளை கொண்டு அன்னாாின் வாழ்க்கையை அல்லாஹ் ஏற்றுக்கொள்வானாக.அனானாரின் பாவங்களை மண்ணித்து உயா அந்தஸ்துகளை இறைவன் சுவனத்தில் வழங்கட்டும்.
என்னை விட உங்களை விட சிறந்த நண்பணிடம் அவா் சென்றுவிட்டாா்.

إِنَّا لله وَ إِنَّا إِلَيْه رَاجِعُونَ

2016.02.23   AT - 11.36 p.m
A.H.Riyas mohamed

Most satisfaction in the world

📕 " யார் உலகில் மிகவும் " சந்தோஷமா " இருக்கிறவங்க ? ✔

📕 " ஒரு ஊரில் ஒரு காக்கா இருந்துச்சாம் . அது ரொம்ப மகிழ்ச்சியா இருந்துச்சு, ஒரு கொக்கை பார்க்கும் வரை.. ✔

📕 " அது கொக்கை பார்த்து சொல்லிச்சாம். நீ வெள்ளைய எவ்வளவு அழகா இருக்கே .✔

📕 " கருப்பா இருக்கும் என்னை எனக்கு பிடிக்கலை என்றது . ✔

📕 " கொக்கு சொன்னது, நானும் அப்படிதான் நினைத்தேன் , கிளியை பார்க்கும் வரை. . ✔

📕 " அது இரண்டு நிறங்களில் எவ்வள்வு அழகா இருக்கு தெரியுமா ? என்றது . ✔

📕 " காகமும் கிளியிடம் சென்று, கேட்டவுடன் அது சொன்னது, உண்மைதான் நான் மகிழ்ச்சியாத்தான் இருந்தேன் ,ஆனால் ஒரு மயிலை பார்க்கும் வரை, அது பல நிறங்களில் எவ்வளவு அழகா இருக்கு தெரியுமா ? என்றது. ✔

📕 " உடனே காகமும் மயில் இருக்கும் ஒரு மிருக காட்சி சாலை சென்று மயிலை பார்க்க , அங்கு ஆயிரக்கணக்கான ஜனங்கள் மயிலை பார்க்க காத்திருக்க , காகம் நினைத்தது ..ம்ம்ம்.இதுதான் மகிழ்ச்சி என்று . ✔

📕 " அழகு மயிலே , உன்னை காண இவ்வளவு பேர் .. என்னை பார்த்தாலே இவர்கள் முகத்தை திருப்பிகொள்கிறார்கள் . ✔

📕 " என்னை பொறுத்தவரை உலகிலேயே நீதான் அதிக மகிழ்ச்சியானவர் , என்றது . ✔

📕 " மயில் சொன்னது. அன்பு காகமே , நான் எப்பவும் நினைத்து கொண்டிருந்தேன் நான் தான் அழகு மேலும் மகிழ்ச்சியான பறவை என்று . ✔

📕 " ஆனால் எனது இந்த அழகு தான் என்னை ஒரு சிறையில் பூட்டி வைத்திருக்க செய்கிறது . ✔

📕 " இந்த மிருக காட்சி சாலை முழுதும் நான் பார்த்ததில் , காகம் மட்டுமே பூட்டி வைக்கப்பட வில்லை .. ✔

📕 " எனவே நான் யோசித்தது , நானும் காகமாக இருந்தால், உலகம் முழுதும் ஜாலியாக சுற்றி வரலாமே , என்றது . ✔

📕 " இதுதான் நமது பிரச்சினையும் ...✔

📕" நாம் தேவை இல்லாமல் நம்மை மற்றவர்களுடன் ஒப்பிட்டு நம்மை நாமே கவலை கொள்ள செய்கிறோம் . ✔

📕 " நாம் எப்பவும் இறைவன் கொடுப்பதை வைத்து சந்தோசம் கொள்வது இல்லை . ✔

📕 " அவன் கொடுத்ததை மதிப்பதும் இல்லை . ✔

📕 " இது நம்மை ஒரு பெரும் துயருக்கு இழுத்து செல்கிறது . ✔

📕 " ஒப்பிடுகளால் யாதொரு பயனும் இல்லை . ✔

📕 " உன்னை முதலில் நேசிக்க கற்றுக்கொள் . ✔

📕"உன்னை உன்னை விட யாரும் நேசிக்க முடியாது✔

📕 "இறைவனின் படைப்புகள் அனைத்தும் ஒவ்வொன்றும் உயர்ந்தவை அவனிடத்தில். ✔

Tuesday, February 23, 2016

Job in KSA

As received .

Email addresses of 40 companies for job application in Saudi Arabia. May ALLAH (.S.W.T.) let's help the needy persons and Allah swt will help us. Please share to benefit muslim brothers & sisters looking for employment:

1-Boeing
careers@boeing.com
2- Delmon Oil & Gas
hr@delogss.com
3- Akzonobel
careers.ksa@akzonobel.com
4- Bureauveritas
abdulla.shaaban@bureauveritas.com
5- uYOKOGAWA
Hamad.alshawoosh@sa.yokogawa.com
6- ARGAS KSA
JOBS@ARGASKSA.COM
7- JATCO
hr@jatco.com.sa
8- Mobily
HR@mobily.com.sa
Recruitment@mobily.com.sa
9- Marafiq
recruitment@marafiq.com
10- Vinnell
job@vinnellarabia.com
11- SADARA
career@sadara.com
12- SATORP
career@satorp.com
13- AYTB
humanresources@aytb.com
14- Safari
career@ safari.com.sa
15- Chamber of Commerce
recruitment@chamber.org.sa
16- Arabian Geophysical & Surveying Co
careers@gaca.gov.sa
17- SAIPEM
hrsa@saipem.com
18- Chevron
scphr@saudichevron.com
19- JGC
recruit@jgc.com.sa
20- JATCO
hrsaudi@jatco.com.sa
21- AYTB
humanresources@aytb.com
22- Schlumberge
armfsrecruiter@slb.com
23- SASREF
a.alshammari@sasref.com.sa
23- SABIC
recruitment@sabic.com
24- Honyweel
MiddleEast@honeywell.com
25- Methanol Chemicals Company
albishi@chemanol.com
26- Jasco
Mohammed.alabdulwahed@jesco.com.sa
27- Sipchem
smushaiti@sipchem.com
28- Rmdkwikform
rmd.ksa@rmdkwikform.com
29- BASF
jobs@basf.com
30- ARAMCO
jobs@saudiamro.com
31- Almajdouie
jobs@almajdouie.com
32- Bank AlFaransi
jobs@alfransi.com.sa
33- Accenture
careers@accenture.com
34- JGC
recruit@jgc.com
35- The Saudi Investment Bank
falyousef@saib.com.sa
36- Wipro
reachus@wipro.com
37- Kincaid International
vacancy@kincaidi.com
38- pg
careers.im@pg.com
39- Sipchem
smushaiti@sipchem.com
aashehri@sipchem.com
mabdullatif@sipchem.com
40- Siemens
yasser.al-mahdi@siemens.com

Forwarded as received. Jazakumullahu khairan


Sharing is caring...
صدقة جاري

ஆணின் திருமணம் என்பது ஆண்கள் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வு..!! ஆனால் ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் அது மாற்றம்..!!

#படித்ததில் வலித்தது#

எல்லா பெற்றோருக்கும் உள்ள தங்கள் பெண்ணை ஒரு நல்ல இடத்தில் கட்டிக் கொடுக்க வேண்டும் என்ற கனவு நியாயமான ஒன்று தான்..!!

அவளுடைய பெற்றோரும் அப்படி தான் மாப்பிள்ளை பார்க்க தொடங்கினர்..!! படித்த மாப்பிள்ளை. கை நிறைய சம்பாதிக்கும் ஒருவன். இருவருக்கும் இருவரையும் பிடித்தது..!!

உடனே நிச்சயம் செய்து விட்டனர்..!! இருவரும் தினமும் அலைபேசியில் பேசத் தொடங்கினர்..!!

திருமண நாள் நெருங்க நெருங்க அவள் வீட்டில் ஒரே பதட்டம்..!! வேலைகள் தலைக்கு மேல் கிடந்தது..!!
இருவரது வீட்டிலும் வேலைகள் துரிதமாக நடந்தது..!!

நாளை திருமண நாள்...
அவளுக்கு மனது என்னவோ போல் இருந்தது..!!
வீட்டை ஒரு முறை சுற்றி பார்க்க வேண்டும் போல் இருந்தது..!!
தினமும் அவருடன் பேசியதில் வீட்டை விட்டு செல்ல போகிறோம் என்று அவள் அப்போது நினைக்கவில்லை..!!
ஆனால் ஏதோ ஒன்றை இழக்கப்போகிறோம் என்று அவள் மனம் பரிதவித்தது..!! தந்தையையும், தாயையும் பார்த்தாள். எல்லோரும் வேலையாய் இருந்தனர்..!!

அவள் வீட்டை ஒரு முறை சுற்றி வந்தாள்..!!
விரித்த கண்களோடு வீட்டை பார்த்தாள். கண்கள் சுருங்கி பின்னர் ஓரத்தில் நீர் துளி சொட்டியது..!!

அங்கே.. தங்கை தனது புதுத்துணி பரவசத்தில் "அக்கா"... என ஓடி வந்தாள்..!!
அவளை பார்த்ததும்.. " என்னாச்சுக்கா..?"
என்றாள்..!!

"பூ வாங்கினால் கூட சரிசமமாக வெட்ட சொல்லி சண்டை போடும் நான் இனி யாருடன் சண்டை போடுவேன்..?? இந்த சின்ன சின்ன மகிழ்ச்சிகளை கொடுத்து விட்டு நான் செல்ல போகிறேனே" என விழியோரம் வடிந்த நீரை துடைத்துக் கொண்டே எண்ணினாள்..!!

"அடுப்படியில் பால் கொதிக்கிறது நீ எங்கே போன..??" என்று அவளை திட்டினாள் அவளை பெற்றவள். அவளை வளர்த்தவள்.. !! அம்மாவை அடிக்கடி திட்டுவதும்.. பின்னர் கட்டி அணைப்பதும் இனி கிடைக்குமா..??

அப்பா யாருடனோ தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார்..!!
அவள் பக்கத்தில் சென்று அமர்ந்தாள்..!!
அப்பா பேசிக்கொண்டே அவளை பார்த்து "அம்மாவை கொஞ்சம் கூப்பிடுமா..!!" என்றார்..!!

"நீ எது கேட்டாலும் வாங்கி தருகிறேன். நீ என் செல்லம்டா.." என்று அன்பை கொட்டும் அப்பாவின் அன்பை இனி நான் எங்கே தேடுவேன்..!!

எச்சிலையும், சோகத்தையும் தொண்டையில் விழுங்கி விட்டு அம்மாவை அழைத்து விட்டு வெளியில் உள்ள மாடிப்படியில் உட்கார்ந்தாள்..!!

எங்கிருந்தோ குரல்..
"அடியே உள்ள போ.. கறுத்து போக போற.. நாளைக்கு கல்யாணத்த வச்சிக்கிட்டு வெளியே வந்து உட்காராத.. !!" பாட்டியின் குரல் தான் அது..!!

எப்போதும் எதையாவது சொல்லிக் கொண்டிருக்கும் பாட்டியின் பேச்சை கேட்காமல் முறைப்பாள்..!!
ஆனால் இப்போது முறைக்க தோணவில்லை. முகம் அப்படியே அழுவது போல பொங்கியது. " என்னாச்சுடி என் ராசாத்தி.." பாட்டி அருகில் வந்து கேட்டவுன் அதற்கு மேல் முடியவில்லை. வீட்டிற்குள் ஓடி சென்று கத்தி அழுதாள்.. !!

எல்லோரும் பயந்து கொண்டு ஓடி வந்தனர். அவள் அம்மாவிடம் "அம்மா நான் இங்கேயே இருந்து விடுகிறேன். உங்களை விட்டு நான் எப்படி செல்வேன். அங்கே எப்படி இருக்குமோ எனக்கு பயமாக இருக்கிறது..!!" என்று அழுதாள்..!!
உடனே அப்பாவின் மனம் அழுதது. அம்மா சமாதானம் செய்தாள்..!!

அப்பா அவ்வளவு நெருக்கம் இல்லாமல் இருந்தாலும் அப்பாவிற்கும் மகளுக்கும் உள்ள பாசம் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது..!!

தங்கை குலுங்கி குலுங்கி அழுதாள்.
"அழாதே அக்கா மாமா உன்ன நல்லா பாத்துப்பாருக்கா.." என வெகுளி பேச்சில் சமாதானம் செய்தாள்..!!

அன்று இரவு...
அவளுக்கு பிடித்த அத்தனையும் சமைத்து கொடுத்தாள் அம்மா..!! ஆனால் அவள் மனம் புண்பட்டு போய் இருந்தாள்..!
நாளை திருமணம். போகும் இடம் சொர்க்கமோ இல்லையோ என்றெல்லாம் தெரியாது. ஆனால் வாழ்ந்த ஒரு சொர்க்கத்தை விட்டு மட்டும் அவள் செல்ல போகிறாள் என்பது தெரிந்தது..!!

ஆணின் திருமணம் என்பது ஆண்கள் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வு..!! ஆனால் ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் அது மாற்றம்..!!

அவள் வாழ்ந்த வீட்டில் இருந்து வேரோடு பிடுங்கி எடுத்து மற்றொரு இடத்தில் நட்டு வைக்கும்
 தான் பெண்ணின் திருமணம்..!!

அதில் துளிர்ந்த பெண்களும் உள்ளனர்.
பட்டுப் போன பெண்களும் உள்ளனர்.

சிந்தனையை சிறைபிடிக்கும் ஒரு பக்க வாசிப்பு

🔷🔳🔷 சிந்தனையை சிறைபிடிக்கும் ஒரு பக்க வாசிப்பு 🔷🔳🔷

        TM முபாரிஸ் ரஷாதி

நவீன இஸ்லாமிய அறிஞர்களை மூன்று வகையினராக பிரித்து நோக்கமுடியும்
1- இஸ்லாமிய இயக்கப் பின்னணி கொண்ட இஸ்லாமிய சிந்தனையாளர்கள்
உதாரணமாக இமாம் ஹசனுல் பன்னா மௌலானா மௌதூதி
ஷஹீத் செய்யித் குத்ப் முஹம்மத் அல் கஸ்ஸாலி முஸ்தபா ஸிபாஈ
சயீத் ஹவ்வா அப்துல் பத்தாஹ் அபூ குத்தா
யூசுப் அல் கர்ழாவி
ராஷித் அல் கன்னூசி
இதில் இஸ்லாமிய எழுச்சிப்போராளிகளையும் உள்ளடக்க முடியும்
உ+ம் ஜமாலுத்தீன் அப்கானி
ரஷீத் ரிழா
முஹம்மத் அப்துஹு
ஷகீப் அர்ஸலான்
போன்றோர்

2- இயக்கம் என்ற வரையறைக்கு அப்பால் சென்று நவீன இஸ்லாமிய சிந்தனைகளை முன்வைப்பவர்கள்
உ+ம் அப்துல் வஹ்ஹாப் அல் மிஸைரி தாஹா ஜாபிர் அல்அலவானி
தாரிக் பிஷ்ரி
அப்துல் ஹமீத் அபூ சுலைமான்
அப்துல்லா பின் பையா
தாரிக் ரமழான்
ஜாஸிர் அவ்தா
ஸைப் அப்துல் பத்தாஹ்
பஹ்மி ஹுவைதி
வலத் தூது
முஹம்மத் முஹ்தார் ஷன்கீதி
போன்றோர்

3- மரபு வழி இஸ்லாமிய சிந்தனையாளர்கள்
உ+ம் ஷாஹ் வலியுள்ளாஹ் திஹ்லவி அஷ்ரப் அலி தானவி
மௌலானா இல்யாஸ்
ஹுஸைன் அஹ்மத் மதனி
ஹலீல் அஹ்மத் சஹாரன்பூரி
காசிம் நாநூதவி
ரஷீத் அஹ்மத் கங்கோஹி
மஹ்மூத் ஹசன் தேவ்பந்தி
காரி தையிப்
அன்வர் ஷா கஷ்மீரி
ஷபீஃ உஸ்மானி
முப்தி தகி உஸ்மானி
மௌலானா தாரிக் ஜெமீல்
முப்தி மென்க்
போன்றோர்கள்
இந்த மூன்று வகையினரையும் பற்றிய முழுமையான வாசிப்பு இல்லாதவர்களிடம் நடுநிலை சிந்தனை என்பது பிரதிபலிக்க வாய்ப்பிருக்காது

இம்மூன்று வகையினரில் எவரையேனும் புறக்கணிக்கின்ற  நிலை ஏற்படுமாயின் இஸ்லாத்திற்காக அவர்கள் செய்த அளப்பெரும் சேவைகள் புறக்கணிக்கப்பட்டதாகவே
கருதப்படும் இம்மூவகையினர் பற்றிய சிறிய அளவேனும் வாசிப்பில்லாமல் பிற்போக்கு சிந்தனை என்று மட்டும் கூறிவிட்டு நவீன இஸ்லாமிய எழுச்சி பற்றி பேசுவதில் எவ்வித அர்த்தமும் கிடையாது குறித்த ஒரு இயக்கத்துடன் சிந்தனை மட்டுப்படுத்தப்படுமாயின் அடுத்த மூன்றில் இரண்டு பெரும்பான்மை பற்றிய அறிவின்மையே அவரிடம் பிரதிபலிக்கும்

இயக்கம் என்ற எல்லையைத் தாண்டிய வாசிப்பு பழக்கத்தை உண்டுபண்ணிக் கொள்பவர்கள் இயக்கம் பற்றிய தெளிவில்லாமல் இருக்கிறார்கள் என்று பொருட்கொள்வதும் பொருத்தமானதல்ல
(المدرسة الوسطية )
நடுநிலை சிந்தனை பள்ளிக்கூடம் என்பது நாம் கற்ற சில அறிஞர்களோடும் சில புத்தகங்களோடும்
நமது சிந்தனையையும் அறிவையும் சிறைப்படுத்தி வைப்பதல்ல
அப்படியாயின் அதற்கும் நடுநிலை சிந்தனைக்கும் எவ்வித தொடர்பும் இருக்காது
கர்ழாவியை தெரிந்திருப்பவருக்கு
தாஹா ஜாபிர் அல்அலவானி பற்றி கொஞ்சமாவது தெரிந்திருக்கவேண்டும்
இவர்கள் இருவரையும் தெரிந்த ஒருவருக்கு
மௌலானா இல்யாஸ் பற்றியோ அன்வர் ஷா கஷ்மீரி பற்றியோ கொஞ்சமாவது தெரிந்திரிக்கவேண்டும் அவ்வாறு தெரிந்து வைப்பது இன்றைய தாஈகளுக்கு தஃவா களத்தில் ஏற்படும் சிக்கல்களை இலகுவில் தீர்த்து வைப்பதற்கு மிக முக்கியமான ஒரு அம்சமாகும்
இந்த மூவகை அறிஞர்கள் விடயத்தில் நடுநிலை பேசும் குறித்த இரண்டு முகாம்களைச் சார்ந்தவர்களும் அதிகம் தவறுவிடுகிறார்கள் என்பதே எனது அவதானம்

குறிப்பு: இம்மூவகையிலும் உள்ளடக்கப்படக்கூடிய சில அறிஞர்களும் உண்டு உ+ம்
ஷாஹ் வலியுல்லாஹ் திஹ்லவி அல்லாமா அபுல் ஹசன் ந்த்வி
வஹ்பதுஸ் ஸுஹைலி போன்றோர்

✒️ நட்புடன் TM முபாரிஸ் ரஷாதி
ஹதீஸ் துறை விரிவுரையாளர்
பாதிஹ் கல்வி நிறுவனம்
🔳🔶🔳🔶🔳🔶🔳🔶🔳🔶🔳🔶🔳

The tube well water

Alhamdulillah.

For the hijragama primary & ladies Arabic college

The tube well water which was sent to test got the certificate that is  suitable  drink.in sha Allah I will post the certificate soon

இந்த மாணவன்தான் Dr. Zakir Naik

விஞ்ஞானப் பேராசிரியரும் ஒரு மாணவனும்
அல்லாஹ் பற்றிய ஓர் உரையாடல்

ஒரு நாத்திக விஞ்ஞானத்துறைப் பேராசிரியர், தமது வகுப்பில் புதிதாக சேர்ந்த ஒரு முஸ்லிம் மாணவனுடன் உரையாட விரும்பி, அந்த மாணவனை எழுப்பினார்.

Professor : நீங்கள் ஒரு முஸ்லிம், இல்லையா ?
Student : ஆம், ஸேர்.
Professor : அப்படியென்றால், உங்களுக்கு அல்லாஹ் மீது நம்பிக்கை இருக்கிறது ?

Student : நிச்சயமாக, ஸேர்.
Professor : அல்லாஹ் நல்லவனா ?
Student : நிச்சயமாக.
Professor : அல்லாஹ் மிக சக்தி வாய்ந்தவனா ?
Student : ஆம்.
Professor : எனது சகோதரன் 'கான்சர்' நோயினால் இறந்தார். அவரது நோயைக் குணமாக்கும் படி அவர் அல்லாஹ்விடம் பல முறை மன்றாடியும் குணமாகவில்லை. எங்களில் பலர் நோயுற்றோருக்கு உதவ விரும்புவார்கள். ஆனால், அல்லாஹ் அவ்வாறு செய்யவில்லை. அப்படியிருக்கும் போது அல்லாஹ் எப்படி நல்லவனாக இருக்க முடியும் ? ஹு......ம் ?
Student : (அமைதி)
Professor : உங்களால் பதில் கூற முடியாது, அல்லவா ? நாங்கள் மீண்டும் தொடர்வோம். அல்லாஹ் நல்லவனா ?
Student : ஆம்.
Professor : சாத்தான் நல்லவனா ?
Student : இல்லை.
Professor : அவனைப் படைத்தது யார் ?
Student : அல்லாஹ்..... . . . .
Professor : அது மிகவும் சரியானது. உலகில் பாவச்செயல்கள் உள்ளனவா ?
Student : ஆம்.
Professor : பாவச்செயல்கள் எல்லா இடத்திலும் இருக்கின்றன, அல்லவா ?அத்துடன்.... எல்லாவற்றையும் படைத்ததும் அவன்தான், அல்லவா ?
Student : ஆம்.
Professor : அப்படியென்றால், பாவச்செயல்களைப் படைத்தது யார் ?
Student : (அமைதி)
Professor : நோய், கஷ்டம், துன்பம், குரோதம், அசுத்தம்.... இவையெல்லாம் இந்த உலகில் தாண்டவமாடுகின்றன, இல்லையா ?
Student : ஆம், ஸேர்.
Professor : எனவே, இவற்றைப் படைத்தது யார் ?
Student : (அமைதி)
Professor : உலகில் உங்களைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை அவதானித்து, புரிந்து கொள்வதற்காக 5 புலன்கள் இருப்பதாக விஞ்ஞானம் சொல்கிறது. சொல்லுங்கள்....நீங்கள் எப்போதாவது அல்லாஹ்வைக் கண்டிருக்கிறீர்களா ?
Student : இல்லை.
Professor : நீங்கள் எப்போதாவது அல்லாஹ் பேசுவதைக் கேட்டிருக்கிறீர்களா ?
Student : இல்லை.
Professor : எப்போதாவது அல்லாஹ்வை தொட்டு உணர்ந்திருக்கிறீர்களா ? அவனது சுவையை ருசித்திருக்கிறீர்களா ? அவனது வாசத்தைத்தான் நுகர்ந்திருக்கிறீர்களா ?
Student : வருந்துகிறேன், ஸேர். அப்படி எதுவுமே இல்லை.
Professor : இருந்தும் நீங்கள் அவனை நம்புகிறீர்கள் ?
Student : ஆம்.
Professor : பரிசோதனை ரீதியாக ஆய்வு செய்து, நிரூபிக்கக் கூடிய முறைகளின் படி, நீங்கள் சொல்லும் அல்லாஹ் இல்லை என்றே விஞ்ஞானம் கூறுகிறது. அதற்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ?
Student : ஒன்றுமில்லை. எனது நம்பிக்கை மட்டுமே இருக்கிறது.
Professor : ஆம். நம்பிக்கை. அதுதான் அறிவியல் காணும் பெரிய பிரச்சினை.
Student : பேராசிரியரே, வெப்பம் என்று ஏதாவது உண்டா ?
Professor : ஆம்.
Student : குளிர் என்று ஏதாவது இருக்கிறதா ?
Professor : ஆம்.
Student : இல்லை. அப்படி ஒன்றுமில்லை.
(வகுப்பறையில் ஒரே நிசப்தம்)
Student : ஸேர், அதிக வெப்பம் இருக்கலாம், அதைவிட அதிக வெப்பம், சூப்பர் வெப்பம், மெகா வெப்பம், குறைந்த வெப்பம், வெப்பமின்மை.......என்று பல படித்தரங்கள் இருக்கலாம். அனால்.............. குளிர் என்று ஒன்று இல்லை. பூச்சியத்துக்குக் கிழே 458 பாகை வரை நாம் நோக்கலாம். அதுதான் மிகக் குறைந்த வெப்பம். குளிர் என்று ஒன்று இல்லை. வெப்பத்தின் குறை நிலையை வர்ணிக்கும் ஒரு சொல்தான் குளிர். குளிரை எம்மால் அளக்க முடியாது. வெப்பம் என்பது சக்தியின் ஒரு வடிவம். குளிர் என்பது வெப்பத்தின் எதிர்ப் பதமல்ல. மாறாக, வெப்பமின்மையே குளிராகும்.
( வகுப்பறையில் இப்போது மயான அமைதி )
Student : இருட்டு என்று ஏதாவது உண்டா, பேராசிரியர் அவர்களே ?
Professor : ஆம். இருட்டு இருப்பதால்தானே இரவு வருகிறது ?
Student : ஸேர், நீங்கள் மீண்டும் பிழை விடுகிறீர்கள். இருட்டு என்பது ஏதோ ஒன்றின் குறைவாகும். குறைவான ஒளி, சாதாரண ஒளி, பிரகாசமான ஒளி, கண்ணைப் பறிக்கும் ஒளி என பல படித்தரங்கள் இருக்கலாம். ஒளி இல்லாத போது ஒன்றுமே தென்படாது. அந்த நிலையைத்தான் நாம் இருட்டு என்கிறோம், இல்லையா? உண்மையில் இருட்டு என்று ஒன்றுமேயில்லை. அப்படி இருந்தால், இருட்டை, அதை விட இருட்டாக்க முடிந்திருக்க வேண்டும். முடிந்ததா ?
Professor : அதனால், நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் ?
Student : ஸேர், உங்களுடைய தத்துவத்தின் அடிப்படை பிழையானது.
Professor : பிழையானது ? விளக்க முடியுமா ?
Student : ஸேர், இருவகைத் தன்மை கொண்ட ஒரு சூழலில் நீங்கள் பணி செய்கிறீர்கள்.
வாழ்வையும் மரணத்தையும் பற்றி நீங்கள் சிந்திப்பது போலவே, நல்ல கடவுள், கெட்ட கடவுள் என்றும் பேசுகிறீர்கள்.
அல்லாஹ் என்ற எண்ணக்கருவை, அளவிடக்கூடிய முடிவுப் பொருளாக நீங்கள் நோக்குகிறீர்கள்.
ஸேர், அறிவியல், ஓர் எண்ணக்கருவைக் கூட விளக்கிட முடியாதது. உதாரணமாக, மின்னியல், காந்தவியல் போன்ற சொற்களை அது பயன்படுத்துகிறது. அவற்றை யாரும் கண்டதே இல்லை. அவற்றின் தன்மைகளைப் பூரணமாகப் புரிந்து கொள்ளவுமில்லை.
மரணத்தை வாழ்வின் எதிர்ப் பொருளாக நோக்குவது மடமையாகும். ஏனெனில், மரணம் என்பது புரிந்து உணரக்கூடிய ஒரு விடயமல்ல.
மரணம் என்பது வாழ்வின் எதிர்ப் பதம் அல்ல. மாறாக, அது வாழ்வின் முடிவைக் குறிப்பதாகும்.
பேராசிரியர் அவர்களே, இப்போது எனக்குச் சொல்லுங்கள்; உங்கள் மாணவர்களுக்கு, அவர்கள் குரங்கின் பரிணாமம் என்று நீங்கள் போதிக்கிறீர்களா ?
Professor: நீங்கள் குறிப்பிடுவது இயற்கையான பரிணாமப் படிமுறை எனின், ஆம் நான் கற்பிக்கிறேன்.
Student : நீங்கள் எப்போதாவது பரிணாமப் படிமுறை வளர்ச்சியை உங்கள் கண்களால் கண்டிருக்கிறீர்களா ?
( பேராசிரியர் புன்முறுவலுடன் தலையை ஆட்டுகிறார், இந்த விவாதத்தின் போக்கைப் புரிய ஆரம்பித்தவராக )
Student : பரிணாமப் படிமுறையின் செயற்பாட்டைக் கண்டவர் எவரும் இல்லை என்பதால், அது தொடர்ந்தும் நடைபெறக்கூடிய ஒரு விடயம் என யாராலும் நிறுவ முடியாது. இந்தக்கருத்தை நீங்கள் மாணவர்களுக்குச் சொல்லியிருக்கிறீர்களா ? இல்லையென்றால், நீங்கள் ஒரு போதகரேயன்றி ஒரு விஞ்ஞானியாக, தத்துவ மேதையாக இருக்க முடியாது.
( வகுப்பில் சலசலப்பு )
Student : இந்த வகுப்பில், பேராசிரியரின் மூளையைப் பார்த்தவர்கள் யாராவது இருக்கிறீர்களா ?
( வகுப்பில் எல்லோரும் சிரிக்கிறார்கள் )
Student : அதன் சப்தத்தைக் கேட்டவர்கள், தொட்டவர்கள், அதன் வாசத்தை உணர்ந்தவர்கள் யாராவது இங்கு இருக்கிறீர்களா ? . . .
அப்படி யாரும் இங்கும் இல்லை, எங்கும் இல்லை...
எனவே, ஏற்றுக்கொள்ளப்பட்ட விஞ்ஞான பரிசோதனை முறைகளின் படி, உங்களுக்கு மூளையே இல்லை என்று நான் கூறலாம்.
இப்போது சொல்லுங்கள் ஸேர், உங்களுடைய விரிவுரையை நாங்கள் எப்படி நம்புவது ?
( வகுப்பறையில் பூரண அமைதி. பேராசிரியர் குறித்த மாணவனை முறைக்கிறார் )
Professor : நான் நினைக்கிறேன், இவை எல்லாமே நம்பிக்கை சார்ந்தவை.
Student : இதைத்தான் நானும் சொல்கிறேன் . . .
மனிதனுக்கும் அல்லாஹ்வுக்கும் இடையிலுள்ள தொடர்பும் இந்த நம்பிக்கைதான்.
இந்த நம்பிக்கைதான் உயிரோட்டமுள்ளது, அதுதான் உலகை ஓட்டுகிறது.


இந்த மாணவன்தான் Dr. Zakir Naik.




Monday, February 22, 2016

Thaththuvam

Manam Thirandhu
Pesungal

Aanal

ManadhiL Pattadhai Ellam
Pesatheerhal

Silar
Purindhu Kolvaarhal

Silar
Pirindhu Selvaarhal
     ~GOOD NIGHT~

பலவீனமானவா்களிடம் நம் பலத்தை பற்றி பேசகூடாது,

பலவீனமானவா்களிடம் நம் பலத்தை பற்றி பேசகூடாது,
கவலையில் இருப்பவா்களிடம் நம் சந்தோசத்தைப் பற்றி பேசக்கூடாது
ஏழைகளிடம் நம் செல்வ நிலைபற்றி பேசக்கூடாது
நமக்கு கொடுக்கப்பட்டதை நாம் பொறுந்திக் கொள்வோம். அல்ஹம்துலில்லாஹ்.
© armshihan

பொறாமை, வெறுப்பில் இருந்து

பொறாமை, வெறுப்பில் இருந்து மனதை தூய்மைப்படுத்தி,
ஏனையவாா்களுக்கு நலவை நாடி,
அவா்களின் வெற்றியில் சந்தோசப்படுவது.
போன்றவைகள் இம்மை மறுமையின் சந்தொசத்தில் மிகப்பெரிய பங்கு வகிக்கும்.
© armshihan

فرصة تعليمية

السلام عليكم ورحمة الله وبركاته.

فرصة تعليمية ..

تم فتح باب القبول لطلاب المنح الخارجية في معهد تعليم اللغة العربية لغير الناطقين بها التابع لجامعة الملك عبد العزيز بجدة ..

وهي فرصة لتعلم اللغة ، والعلوم الشرعية حيث يقدم لهم أيضا برنامج علمي إثرائي للطلاب الوافدين ..

ملاحظة
الأولوية في المعهد لمن لا يعرف العربية .. ولا مانع من تقدم غيرهم

 http://ali.kau. edu. sa

To :-Arafath Sports Club from Hakeem

To :-Arafath Sports Club
I Do have Sponcer to form a Basketball Team from Malasiya
They are looking some basic information if you all interested which is:-
01. Place to build a Basketball court
02.Players Age between 13 to 16
03.Accommodation for Coach (Coach coming from Malasiya to train for 6 month period)
04.full time Coach Needed from our Village(he will go to Malasiya for training)
05.able to travel to Malasiya every year(cost covered by them)
06.Can't stop in middle they will make contract with Sports Club for Maximum 05 years of period
Those are the basic points they gave us
If you all interested I can discuss more with them
Cheers | Hakeem

Sadaqa is not only related to money.

Sadaqa is not only related to money. Infact these things are also considered as Sadaqa.
1. Dua
2. Knowledge.
3. Advice.
4. To smile at your Muslim brother.
5. Help.
6. Time.
7. Tarbiyyah.
8. Patience over difficult times.
9. To advise for good.
10. To stop from evil.
11. To talk softly.
12. To forgive.
13. To give respect.
14. To be a part of someones happiness.
15. To visit the sick.
16. To remove harmful things from the path.
17. To guide someone on the right way.

Share this message to all ur loved ones and get reward of Sadaqa too insha Allah aameen.

"தஹஜ்ஜுத்"

Padtthathil Piditthathu.....

ஷேக் ஸஅதியும் அவரது மகனும் "தஹஜ்ஜுத்" தொழுது கொண்டிருந்தனர். துஆ செய்து முடிந்ததும் மகன் தந்தையிடம் சொன்னார்,
"தந்தையே ! நாங்கள் தொழுகை முடித்து விட்டோம் இவங்க எல்லாம் தொழாமல் தூங்கிக்கொண்டிருக்கிறார்களே?
அதற்கு 
" மகனே மற்றவர்களின் குறைகளை காண்பதற்காக விழித்திருப்பதைவிட நீயும் தூங்கியே இருந்திருக்கலாம் "
(இமாம் ஸஅதி)

அடுத்த முறை நம்முடையதாகவும் இருக்கலாம்......

சின்ன கதை தான் படிங்க.. சுவாரஸ்யமா இருக்கும்...

ஒரு வீட்டில் டீட்டீ என்ற எலி தனது இரவு நேர இரைதேடப் புறப்பட்டுக்கொண்டிருந்தது.

வலையை விட்டு தலையை உயர்த்திப்பார்த்தது.

வீட்டின் எஜமானனும் எஜமானியும் ஒரு பார்சலைப் பிரித்துக் கொண்டிருந்தார்கள்.

ஏதோ நாம் சாப்பிடக்கூடிய பொருள்தான் உள்ளே இருக்கும் என்று ஆவலோடு பார்த்தது டீட்டீ.

அவர்கள் வெளியே எடுத்தது ஒரு எலிப்பொறி.

அதைப்பார்த்ததும் டீட்டீக்கு மூச்சே நின்று விடும் போல இருந்தது.

உடனே ஒரே ஓட்டமாக வீட்டில் இருந்த கோழியிடம் போய் சொன்னது "பண்ணையார் ஒரு எலிப்பொறி வாங்கி வந்துள்ளார். எனக்கு பயமாக இருக்கிறது."
கோழி விட்டேற்றியாகச் சொன்னது" உன்னைப் பொறுத்தவரை கவலைப்பட வேண்டிய விஷயம்தான்.நல்ல வேளையாய் இந்த எலிப்பொறியால் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை."

உடனே அது பக்கத்தில் இருந்த வான்கோழியிடம் அதே விஷயத்தைப் போய்ச் சொல்லியது. வான்கோழியும் அதேபதிலைச் சொல்லியதோடு "நான் எலிப்பொறியயெல்லாம் பார்த்து பயப்பட மாட்டேன்." என்றது.

மனம் நொந்த டீட்டீ அடுத்து பக்கத்தில் இருந்த ஆட்டிடம் போய் அதே விஷயத்தைச் சொல்லியது. ஆடும் அதேபதிலைச் சொல்லியது. அத்தோடு நின்றிருந்தாலும் பரவாயில்லை "எலிப்பொறியை பார்த்து என்னையும் பயப்படச் சொல்கிறாயா?" என்று நக்கலும் அடித்தது.

அன்று இரவு எலிப்பொறியில் ஒரு பொரித்த மீன் துண்டை வைத்து விட்டு பண்ணையாரும் அவர் மனைவியும் தூங்கப் போயினர்.

ஒரு அரை மணி நேரத்தில் " டமால் " என்றொரு சத்தம்.

எலி மாட்டிக்கொண்டுவிட்டது என்று பண்ணையார் மனைவி ஓடிவந்து எலிப்பொறியைத் கையில் தூக்கினாள்.

எலிக்கு பதிலாக பாதி மாட்டியிருந்த பாம்பு ஒன்று எஜமானியம்மாளைக் கடித்து விட்டது.

எஜமானியம்மாளை உடனே ஆஸ்பத்திரிக்கு எடுத்துக்கொண்டு ஓடினார்கள். விஷத்தை முறிக்க இன்ஜெக்சன் போட்டபின்னும் பண்ணையார் மனைவிக்கு ஜுரம் இறங்கவேயில்லை.

அருகில் இருந்த ஒரு மூதாட்டி "பாம்புக் கடிக்குப் பின்னால் வரும் காய்ச்சலுக்கு "சிக்கன் சூப் வைத்துக்கொடுத்தால் நல்லது" என்று யோசனை சொன்னாள்.

கோழிக்கு வந்தது வினை. கோழி அடித்து சூப் வைக்கப்பட்டது. கோழி உயிரை விட்டது.

அப்போதும் பண்ணையார் மனைவியின் ஜுரம் தணியவில்லை.

உறவினர்கள் சிலர் வந்தார்கள்.அவர்களுக்குச் சமைத்துப்போட வான்கோழியை அடித்தார்கள். வான்கோழியும் உயிரை விட்டது.

சில நாட்களில் பான்னையாரம்மாவின் உடல் நலம் தேறியது.

பண்ணையார் மனைவி பிழைத்ததைக் கொண்டாட ஊருக்கே விருந்து வைத்தார்.

இந்த முறை ஆட்டின் முறை.

விருந்தாக ஆடும் உயிரை விட்டது.
நடந்த அத்தனை நிகழ்வுகளையும் டீட்டீ வருத்ததோடு கவனித்துக் கொண்டிருந்தது.

பண்ணையார் மனைவியின் பாம்புக்கடிக்குக் காரணமான எலிப் பொறியைத் தூக்கிப் பரணில் போட்டு விட்டார்.

எலி தப்பித்து விட்டது. அப்பாடா...
______________________________
நீதி :- அருகில் இருப்பவர்கள் தனக்கொரு பிரச்சினை என்று வந்தால் "என்ன" என்றாவது கேளுங்கள்.

ஏனென்றால் யாருக்கு என்ன பிரச்சினை எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது.

அடுத்தது அந்தப் பிரச்சினை நமக்கும் வரலாம்.

அடுத்த முறை நம்முடையதாகவும் இருக்கலாம்......

ஓர் திருப்பத்தில் எதோ நெருட சற்றே திரும்பிப் பார்த்தேன்...!

பல மயில் தாள்கள் செலவுசெய்து
வாங்கினேன் ஒரு ஸ்மார்ட் போன்
கறுப்பு நிறம் ஸ்லிம்  மொடல்
ஆரம்பத்தில் கொஞ்சம்
அடம்பிடித்து- பின்னர்
ஆறாவது விரலாய் ஆகிப்போனது !

காற்சட்டைப் பக்கற்றில்
பர்ஸ் வைக்க மறந்திடினும்
போனை மட்டும் மறந்திடேன்
இருக்கையில் நடக்கையில்  படுக்கையில் என
எல்லா இடங்களிலும் கூடவே வந்தது...!

Facebook நெருக்கமானது
Whats App வந்து அறிமுகமானது
Instagram Telegram  கூட ஹலோ சொன்னது
Selfie எடுப்பதுவே  வாடிக்கையானது

நாளாக நாளாக நட்பு வட்டம் பெருகியது
அறிமுகமில்லா நபர்களிடமிருந்தும்
அறிமுகம் கிடைத்தது
விட்டுப்போன பள்ளி நண்பன்
பழைய பகைவனெல்லாம்
குரூப் chat இல் நெருக்கமானான்...!

Alarm அடித்து எழுப்பாட்டி
காலைத் தேநீருடன் ஊர் நடப்பு பேசி
நான் உறங்க உறங்கி
கண்விழிக்கையில் எழுந்து இப்படி
அண்டம் பெருவெளி
ஆழச் சமுத்திரம் தாண்டியும்
நானும் என் செல்போனும் பயணித்திருந்தோம்!

ஓர் திருப்பத்தில் எதோ நெருட
சற்றே திரும்பிப் பார்த்தேன்...!
என் மனைவியும் குழந்தைகளும்
எனை விட்டும் வெகுதூரம் நின்றிருந்தனர் !!

பணம் கொடுத்து போனை
விலைக்கு வாங்கிவிட்டதாய்
இறுமாந்திருந்தேன் !!
இப்போதுதான் புரிகிறது
நல்ல விலை கொடுத்து
அது என்னை வாங்கிக் கொண்டது...!

Excident in Hemmathagama

3vil excidand ahi Fahmy nanavin vappa hemmathagama hospitallil admite seiyappattullar mahroof mama

Mawanallakki kondu porathukkana etpaduhl nadaipettrukkondu irukkirazu

Thalaiyil adi konjam pattu irukkirazu


Shafakallah



Let's pray him

Saturday, February 20, 2016

இது சிரிக்க வேண்டிய விஷயம் அல்ல.

ஒரு நிறுவனம் ...

வேலைக்கு ஆட்கள் தேவை  என்று அறிவித்தது,

அதன்படி_
நிறைய நபர்கள் நேர்கானலுக்கு  வந்திருந்தார்கள்.

அனைவரையும் ஒரு அரங்கத்தில் உட்கார  வைத்தார்கள்...

அனைவரிடமும் வினாத்தாள்களும்,
விடைத்தாளும் வழங்கப்பட்டது.

இப்பொழுது அந்த  நிறுவன மேலாளர்  பேசினார்,
இந்த வினாத்தாளில் பத்து  கேள்விகள் உள்ளது.

உங்களுக்கு ஐந்து நிமிடம் நேரம் ஒதுக்கப்படும்.
அதற்க்குள் இந்த  வினாக்களுக்கு நீங்கள்  பதிலலிக்க வேண்டும்.

தகுதியுடைய நபர்கள்  தேர்ந்தெடுக்கப்பட்டு வேலை வழங்கப்படும்  என்றார்,

ஐந்து நிமிட நேரம்  ஆரம்பமானது..

நேரம் குறைவாக உள்ளது என்று அனைவரும் வேகமாக பதில் எழுதினர்.

நேரம் முடிந்த பின்...
அனைவரிடமும் விடைத்தாளை வாங்கினார் மேலாளர், விடைத்தாளை வாங்கும் போது ஒவ்வொருவரும்  நேரம்  குறைவாக  கொடுத்து விட்டீர்கள், எங்களால் ஐந்து  கேள்விகளுக்கும், ஏழு   கேள்விகளுக்கும் பதில் எழுத முடிந்ததே தவிர, அனைத்து வினாக்களுக்கும் பதில்  எழுத முடியவில்லை  என்றனர்.

அதில் இருவர் மட்டும் எந்த பதிலும் எழுதவில்லை என்று வெற்றுத்தாளை மேலாளரிடம் கொடுத்தனர்.

அதன்பின்,
அந்த நிறுவன மேலாளர் சொன்னார்.

விடைத்தாளில் பதில் எழுதாத இவர்கள்  இருவர்  மட்டும் இந்த நிறுவனத்தில் வேலை செய்ய   தகுதியானவர்கள்.
மற்றவர்கள் வீட்டிற்கு  செல்லலாம் என்றார்.

அனைவருக்கும் ஒரே  ஆச்சரியம்,

அனைவரும் ஒரு சேர அந்த  நிறுவனமேலாளரிடம்  கேட்டனர்.

வினாக்களுக்கு சரியான  பதிலளித்த எங்களுக்கு  வேலை இல்லை  என்கிறீர்கள்.
எந்த வினாக்களுக்கும் பதில் அளிக்காத அந்த  இருவருக்கு மட்டும் எப்படி  வேலை கொடுத்தீர்கள் என்றனர்.

(இந்த இடத்தில் நமக்குள் தோன்றும் கேள்வியும் இதுதான். பதில் அளித்தவர்கள் இருக்க, பதில்  அளிக்காதவர்களுக்கு வேலையா? )

அதற்கு அந்த மேலாளர்  சொன்னார்,

எல்லோரும்  அந்த  பத்தாவது கேள்வியை படித்துப் பாருங்கள்,
படித்துப் பார்த்த அனைவரும் பதிலேதும் பேச முடியாமல் வீட்டிற்கு  சென்றனர்,

அந்த பத்தாவது கேள்வி இது தான்..

10)  மேற்கண்ட எந்த  வினாக்களுக்கும் நீங்கள்  பதில் அளிக்க வேண்டாம்  என்பதாகும்.

இது சிரிக்க வேண்டிய  விஷயம் அல்ல.
நாம் அனைவரும் சிந்திக்க  வேண்டிய விஷயம்,

இரண்டு நிமிடம் நேரம்  ஒதுக்கி வினாத்தாள் முழுவதையும்  படித்திருந்தால் வேலை  நிச்சயம் கிடைத்திருக்கும் அல்லவா?

சிந்தனைக்கு :
இந்த நவீன யுகத்தில்   பிள்ளைகளை படி படி என்று படிக்கச் சொல்லி  நிறைய மதிப்பெண்கள்  வாங்க வேண்டும் என்று  நினைக்கிறோமே தவிர,

நம் பிள்ளைகள் நல்ல  புத்திசாலியாக வளர வேண்டும் என்று யாருமே நினைப்பதில்லை...

பாத்திமா (ரலியல்லாஹு அன்ஹா) வீட்டில் நடந்த அற்புத கலந்துரையாடல்

பாத்திமா (ரலியல்லாஹு அன்ஹா) வீட்டில் நடந்த அற்புத கலந்துரையாடல்

ஒரு சமயம் அருமை பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் தமது தோழர்களான ஹஸ்ரத் அபூபக்கர் (ரலியல்லாஹு அன்ஹு), ஹஸ்ரத் உமர் (ரலியல்லாஹு அன்ஹு), ஹஸ்ரத் உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹு) அனைவர்களையும் அழைத்துக் கொண்டு தனது அருமை மகள் பாத்திமா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களின் வீட்டிற்குச் சென்றார்கள்.

காரணம் தன் மருமகன் ஹஸ்ரத் அலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் உடல்நிலை சரி இல்லாமல் இருந்தார்கள். நோய் விசாரிக்க நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் தலைமையில் ஒரு சிறிய கூட்டம் வருவதை படுக்கையில் இருந்த ஹஸ்ரத் அலி (ரலியல்லாஹு அன்ஹு) புரிந்துகொண்ட பெரும் மகிழ்ச்சி அடைந்தவர்களாக எழுந்து வரவேற்று உள்ளே அழைத்து அமர வைத்தார்கள்.



உள்ளே இருந்த தன் அன்பு மனைவி பாத்திமா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களிடம் விஷயத்தை சொன்ன போது அவர்கள் உள்ளம் துள்ளிக் குதித்தது. ஹஸ்ரத் அலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் உடல்நலம் பற்றி நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் விசாரித்தார்கள். விருந்தினர்களுக்கு ஏதாவது கொடுக்க வேண்டுமே, ஹஸ்ரத் (அலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள், அருமை மனைவி பாத்திமா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களிடம் சென்று, “ஏதாவது உணவு இருக்கிறதா?” என்று விசாரித்தார்கள்.

“இப்போது நம் வீட்டில் தேன்தான் இருக்கிறது. அதை கொடுங்கள்” என்று அழகான பிரகாசமான கிண்ணத்தில் தேனை ஊற்றிக் கொடுத்தார்கள் பாத்திமா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள். அதை வாங்கி விருந்தினர்களின் முன் வைத்தார்கள் ஹஸ்ரத் அலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள்.

மகள் வீட்டின் தேனைப் பருகும்போது அதில் ஒரு முடி இருப்பதை கண்டு கொண்டார்கள் கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள். சிறிது நேரம் கிண்ணத்தை உற்றுப் பார்த்து யோசித்து தம்முடன் வந்த தோழர்களைப் பார்த்து “அருமைத் தோழர்களே! இதோ பிரகாசமான கிண்ணம். இனிமையான தேன். அதில் ஒரு முடி, இதை வைத்து உங்கள் பொன்னான கருத்துக்களை சொல்லுங்களேன்’ என்று அன்புடன் வேண்டிக் கொண்டார்கள்.

முதலாவதாக தேன் கிண்ணத்தைக் கையிலெடுத்த ஹஸ்ரத் அபூபக்கர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் ‘ஈமான் இந்த தேன் கிண்ணத்தை விட பிரகாசமானது. ஈமானோடு வாழ்வது தேனைவிட இனிமையானது. ஈமானோடு இறப்பது இந்த முடியைவிட சிக்கலானது” என்றார்கள்.

அடுத்து ஹஸ்ரத் உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் தனது கருத்தை முன் வைத்தார்கள். “ஆட்சி அதிகாரம் இக்கிண்ணத்தை விட பிரகாசமானது. ஆட்சி புரிவது தேனைவிட இனிமையானது. ஆட்சியில் நீதமாக நடந்து கொள்வது முடியைவிட சிக்கலானது” என்றார்கள்.

ஹஸ்ரத் உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் தேன் கிண்ணத்தைக் கையிலெடுத்து “கல்வி இக்கிண்ணத்தை விட பிரகாசமானது. மார்க்கக் கல்வியைக் கற்றுக் கொள்வது இந்த தேனைவிட இன்பமானது. கல்வி கற்றதின்படி அமல் செய்வது முடியை விட கடினமானது” என்றார்கள்.

அடுத்து ஹஸ்ரத் அலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் தங்களின் கருத்தை முன்வைத்தார்கள். “விருந்தாளிகள் இந்த கிண்ணத்தை விட பிரகாசமானவர்கள். விருந்தாளியை உபசரிப்பது இந்த தேனைவிட இனிமையானது. விருந்தாளியை திருப்திப்படுத்துவது இந்த முடியை விட சிக்கலானது” என்றார்கள்.

அடுத்து தனது அருமை மகள் பாத்திமா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களின் கருத்தை கேட்டார்கள் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள்.

அதற்கு சுவர்க்கத்து பேரரசி பாத்திமா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள், “யா ரஸுலலல்லாஹ்! பெண்களிடம் வெட்கம் என்பது இந்த கிண்ணத்தை விடப் பிரகாசமானது. பெண்கள் பிறரிடம் இருந்து உடலை மறைத்து வாழ்வது இந்த தேனை விட இனிமையானது. பெண்கள் தங்களைத் தாமே இவ்வுலகின் தீயப்பார்வை, தீய நடத்தைகளிலிருந்து பாதுகாத்துக் கொள்வது இந்த முடியைவிட சிக்கலானது” என்றார்கள்.

அனைவர்களின் கருத்துகளையும் வாங்கிய பின் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் தங்களின் முபாரக்கான வாய் திறந்து தங்களின் பொன்னான கருத்துகளை இப்படிச் சொன்னார்கள்.

“உருவமில்லாத இறைவன் இக்கிண்ணத்தை விட பிரகாசமானவன். அந்த இறைவனிடம் ஒன்றி விடுவது இத்தேனை விட இனிமையானது. இறைவனின் கட்டளையின் பிரகாரம் வாழ்வது இந்த முடியை விட சிக்கலானது” என்றார்கள்.

உடனே வானவர் கோமான் ஹஸ்ரத் ஜிப்ரீயில் (அலைஹிஸ்ஸலாம்) அங்கு வந்து, “யா ரஸூலல்லாஹ்! எனது கருத்தையும் சொல்லி விடுகிறேன்” என்று அனுமதி வாங்கி, “அல்லாஹ்வின் பாதையில் செல்வது இந்த தேனை விட இனிமையானது. அல்லாஹ்வின் பாதையில் கடைசி வரை இஸ்திகாமத்தாக இருப்பது முடியை விட சிக்கலானது’ என்றார்கள்.

இந்த புனிதமான உரையாடல்களை கேட்டு கொண்டிருந்த இறைவன் தனது கருத்தை சொல்லி அனுப்பினான். “யா முஹம்மது அவர்களே! சுவர்க்கம் இந்த கிண்ணத்தை விடப் பிரகாசமானது. சுவனத்தில் படைக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் தேனை விட இனிமையானது. சுவனத்தின் பாலத்தை (சிராத் பாலம்) கடப்பது இந்த முடியை விட சிக்கலானது