Prof

Thursday, January 21, 2016

ஈமானை பாதுகாக்க வழி!!

ஒரு அரசன் விலை உயர்ந்த வைரத்தை பாதுகாக்க ஒரு தங்கப்பெட்டி செய்தான்.தங்கப்பெட்டியை பாதுகாக்க செம்புப்பெட்டி செய்தான்.செம்புப்பெட்டியை பாதுகாக்க இரும்புப்பெட்டி செய்தான் பின் இரும்புப்பெட்டியை பாதுகாக்க மண்ணாலான குடுவை செய்தான்.

இப்போது திருடன் வந்து மண் பானையை திருடிச்சென்று உடைத்தால் இரும்புப்பெட்டி கிடைக்கும் அதை உடைத்தால் செம்பு அதை உடைத்தால் தங்கம் அதை உடைத்தால் வைரம் கிடைக்கும்.அதுபோலவே,அந்த வைரம் தான் ஈமான்.அந்த தங்கப்பெட்டி பர்ளான வணக்கம்.செம்புப்பெட்டி
தான் சுன்னத்.இரும்புப்பெட்டி வாஜிபு.மண்பானை தான் நபிலான வணக்கம்.

அந்த திருடன் தான் ஷைத்தான்.முதலில் மண்பானை பிறகு இரும்பு பிறகு செம்பு பிறகு தங்கப்பெட்டிகளை உடைப்பான் நம் மனதிலிருந்து.பின் தான் வைரத்தில் கை வைக்க முடியும்.அதற்கு வழி வகுக்காமல் நம் அமல்களை பேணிப்பாதுகாத்தால் மண்பானையை கூட உடைக்க விடாமல் பாதுகாக்கலாம்.

இமாம் கஸ்ஸாலி ரஹ்மத்துல்லாஹி அலைஹி
தன் மனைவியின் தேவைகளை
பூர்த்திசெய்யும்போது ஒரு ஆண்
அழகாகிறான்..
தன் கணவனின் வருமாணம் அறிந்து தன்
தேவைகளை குறைத்துக்கொள்ளும் போது
ஒரு பெண் அழகாகிறாள்..
அல்ஹம்துலில்லாஹ்.. நாங்கள்
அழகாணவர்கள

முத்துக்களும் கூழாங்கற்களும்

Hafsa Abdul Aleem 

கத்தி முனையிலும் 
கலக்கம் சிறிதுமின்றி 
தீனுக்காய் முதன் முதலாய் 
கம்பீரமாய் ஷஹீதானார் வீரப்பெண் 
அன்னை சுமையா! 
சமையலறையில் 
கத்தி லேசாய் கீறியதற்கே 
காது கிழியக் கத்துகிறாள் 
எதிர் வீட்டு சுமையா!! 

செல்வம் அத்தனையும் தீனுக்கே 
என கணவன் கைகளில் இறைத்துவிட்டு 
இறுதியில் முழுதாய்ப் போர்த்த 
நல்லதோர் போர்வையின்றியே 
கண்களை மூடினார் 
செல்வச் சீமாட்டி அன்னை கதீஜா!
மாதக் கடைசியில் கொஞ்சம் 
கையைக் கடிக்கவே 
பெருநாளைக்கு லெஹங்கா 
வாங்கித் தரவில்லையென கணவனிடம் 
முகத்தைத் தூக்கிவைத்துக் கொள்கிறாள்
நம் பக்கத்து வீட்டு கதீஜா!! 
மஹ்ரமில்லா ஆணின் உடல் 
அடக்கப்பட்டதுமே 
அதுவரை கணவனுடன் 
வாழ்ந்திருந்த வீட்டை விட்டே 
வெளியேறினார் 
அன்னை ஆயிஷா !
'மஹ்ரம்' என்றால் என்னவென்று 
அப்பாவியாய்க் கேட்கிறாள் 
பின் வீட்டு ஆயிஷா !!

குர்ஆனை நூல் வடிவில் 
தொகுத்திட உதவி செய்து 
முழுமையாக மனனம் செய்தும் 
வைத்திருந்தார் அல்-ஹாபிஸா
அன்னை ஹப்ஸா !
Degree முடிப்பதில் 
காலம் கடத்தியதில் 
குர்ஆன் முடிக்கவில்லை 
இந்த ஹப்ஸா !!

கணவனின் கண்களுக்கு மட்டும் 
என்னை பேரழகியாகக் காட்டிடு 
என பிரார்தனை செய்தார் 
சுவனத் தலைவி 
அன்னை பாத்திமா சஹ்றா !
சாயம் பூசிய உதடுகள் குவித்து 
கணவன் மட்டுமே 
காணவேண்டிய தன் அழகை 
Facebook இல் கடை விரிக்கிறாள் 
மாடி வீட்டு பாத்திமா!!

இறை தியானத்தில் 
இவ்வுலகையே மறந்து 
மணிக்கணக்காய் திளைத்திருந்தார் 
அன்னை ஜுவைரியா!
ஐ போன் games போ(b)ரடிக்கவே 
Lumia விற்கு மாறும் 
ஐடியா வில் இருக்கிறாளாம் 
நம்ம பிஸி ஜுவைரியா !!

தாராளமாய் 
அள்ளி அள்ளிக் கொடுத்ததாலே 
நீண்ட கையுடயவர் ஆனார் 
அன்னை ஸைனப் !
Dinner முடித்து வரும்போது 
Restaurant வாசலில் 
கையேந்தும் அபலைக்கு 
ஐந்து ரூபா கொடுப்போமா 
ஆறு ரூபா கொடுப்போமா என 
அரை மணி நேரம் யோசிக்கிறார் 
சைனப் தாத்தா !!

ஆணை இட்டால் அத்தனையும் 
அரை நொடியில் கிடைக்கும்!
கணவன் ஆனாலும் 
கயவனவன் மாளிகை தேவையில்லையென 
சுவர்க்கத்தில் மாளிகை கேட்டார் 
அன்னை ஆசியா !
மாடி வீட்டுக்கும்
நாலு வீலுக்கும் ஆசைப்பட்டு 
தீனை விட்டே ஓடிப் போனாள் 
அடுத்த தெரு ஆசியா !!

அழகும் அலங்காரமும் 
கணவனிடம் மட்டுமே என 
வெளியே செல்ல நேர்ந்தால் 
கண்ணியமாய் சென்ற 
எம் அன்னையர் 
சிப்பிக்குள் ஒளிந்திருக்கும் முத்துக்கள்!!!

உடையவன் வீட்டிலிருக்கையில் 
அழுக்கு நைட்டியும் 
எண்ணை வடியும் முகமுமாய் 
இருந்துவிட்டு வெளியேறுகையில் 
இருப்பதிலே அழகிய ஆடை தேர்ந்து 
யாருக்குக் காட்ட 
தெருக்களில் திரிகின்றன 
இந்தக் கூழாங்கற்கள் ...?


படித்ததில் பகிர்வது